தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தான் பயிற்றுவித்த மாணவர்களை அரசே புறக்கணிக்கலாமா?

24 May 2026, 10:34 pm
தான் பயிற்றுவித்த மாணவர்களை அரசே புறக்கணிக்கலாமா?

தான் பயிற்றுவித்த மாணவர்களை அரசே புறக்கணிக்கலாமா?

தமுஎகச மாநிலக் குழு கேள்வி சென்னை, மே 24- ஜூனியர் போட்டோகிராபர் பதவிக்கு மேலும் சில கல்வித் தகுதிகளைச் சேர்த்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வழி யாகத் திருத்த அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் (தமுஎகச) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்துச் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலப் பொதுச் செய லாளர் களப்பிரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நிறுவனத்தில் பயின்ற மாண வர்களுக்கே அரசுப் பணியில் அநீதி இழைக்கப் படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கல்வித் தகுதியில் குளறுபடி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் மூலமாக கடந்த மே 20 அன்று வெளியிடப் பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான விளம்பரத்தில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் வரும் “Junior Photographer” பதவிக்கான கல்வித் தகுதியாக “B.Sc Visual Communication” மட்டுமே குறிப் பிடப்பட்டுள்ளது.

அரசின் இத்தகைய அறிவிப்பால், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் புகைப் படக்கலையை முறையாகப் பயின்ற மாண வர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க இயலாத அவலச் சூழல் நிலவுகிறது.

அரசின் செய்தித் துறையின்கீழ் இயங்கும் இந்நிறுவனத்தில் DFT (Diploma in Film Technology) மற்றும் BVA (Bachelor of Visual Arts) ஆகிய ஒளிப்பதிவு, புகைப்படக் கலை தொடர்பான தொழில்முறைப் படிப்புகள் கடந்த 1945 முதல் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

நேரடி கேமரா கையாளுதல், லைட்டிங், விசுவல் காம் போசிஷன் உள்ளிட்டவற்றில் நன்கு பயிற்சி பெற்று வெளியேறிய மாணவர்களிடையே, தங்க ளுக்குப் பயிற்சி வழங்கிய அரசு நிறுவனமே தங்களைப் புறக்கணிப்பது மிகுந்த ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.

திருத்த அறிவிப்புக்கு வலியுறுத்தல் DFT மற்றும் BVA ஆகிய படிப்புகள் ஜூனியர் போட்டோகிராபர் பதவியின் பணித்தன்மையுடன் நேரடி தொடர்புடையவையாகும்.

எனவே, அரசின் சொந்தத் திரைப்படக் கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை அங்கீகாரத்தைக் கருத்தில் கொண்டு, தற்போதைய கல்வித் தகுதியுடன் DFT மற்றும் BVA படிப்புகளையும் தகுதிகளாக இணைக்க வேண்டும்.

இதனைச் சேர்த்துத் தேர்வா ணையம் உடனடியாகத் திருத்த அறிவிப்பு வெளி யிட வேண்டும் எனத் தமுஎகச மாநிலக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.