6,574 குரூப்-4 பணியிடங்கள் போதாது!
9 Oct 2026, 11:41 pm

6,574 குரூப்-4 பணியிடங்கள் போதாது! குறைந்தபட்சம் 10,000 பணியிடங்களை நிரப்ப வாலிபர் சங்கம் கோரிக்கை

சென்னை, அக். 6 –தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பில் உள்ள 6,574காலிப்பணியிடங்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் தேவைக்குப் போதுமானதல்ல என்றும், குறைந்தபட்சம் 10,000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வேலைவாய்ப்புத் தேவையும் தேர்தல் வாக்குறுதிகளும்

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கும் சூழலில், பலஆண்டுகளாகத் தேர்வுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக் கோரியுள்ளனர். தற்போதைய அறிவிப்பு தோராயமானது மட்டுமே என்பதால், இறுதிப்பட்டியலை முழுமையாகக் கணக்கிட்டு பணியிடங்களை உயர்த்த வேண்டும் எனக் வலியுறுத்தப்பட்டுள்ளது.தவெக தனது தேர்தல் அறிக்கையில் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் 365 நாட்களில் காலிப்பணியிடங்களை நிரப்பச் சட்டம் கொண்டுவரப்படும் என உறுதியளித்ததை நினைவூட்டியுள்ள வாலிபர் சங்கம், அந்த வாக்குறுதிக்கான முதல் சோதனையை இந்த குரூப்-4 தேர்வில் அரசு எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுஉள்ளது.

வெள்ளை அறிக்கையும் கோரிக்கைகளும்

அரசுத் துறைகளில் உள்ள மொத்த காலிப்பணியிடங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றும், ஆண்டுதோறும் காலமுறை ஆட்சேர்ப்பு அட்டவணையை வெளியிட வேண்டும் என்றும் வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில்வேலைவாய்ப்பு குறித்துவழங்கப்படும் வாக்குறுதிகள் வெறும் அறிவிப்புகளாக நின்றுவிடாமல், உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுஉள்ளது.