வாய்ப்பு வாசல்
7 Oct 2026, 8:38 pm

வாய்ப்பு வாசல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 6,574 பணியிடங்கள்

பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 574 காலிப்பணியிடங்களி நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.

வயது வரம்பு – கிராம நிர்வாக அலுவலர் மற்றும் செயல் அலுவலர் பணியிடங்களுக்கு மட்டும் முறையே 21 மற்றும் 25 என்று குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பணியிடங்களுக்குக் குறைந்தபட்ச வயதாக 18 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்ச வயதைப் பொறுத்தவரையில், பொதுப் பிரிவினருக்கு செயல் அலுவலர் பணியிடத்திற்கு 35 வயது என்றும், பிற பணியிடங்களுக்கு 30 வயது என்றும் உள்ளது. மற்ற பிரிவினரைப் பொறுத்தவரை, பணியிடங்கள் வாரியாக, துறைகள் வாரியாக அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபரங்களை அறிவிக்கையில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை – www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு(One Time Registration) செய்த பின்பே விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். ஏற்கனவே ஒருமுறைப் பதிவு செய்திருந்தால் அவர்கள் நேரடியாக இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தினை நிரப்பபலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியான நவம்பர் 5க்குப் பிறகு நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரையில், விண்ணப்பங்களைத் திருத்துவதற்கான சாளரம் திறக்கப்படும். நவம்பர் 11க்குப் பிறகு எந்தவிதமான திருத்தங்களையும் மேற்கொள்ள இயலாது. சில பணியிடங்களுக்குக் குறிப்பான தகுதிகள் தேவைப்படும். அறிவிக்கையில் அது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேர்வுத் திட்டம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி IV பணிகள்) ஒரு படிநிலையைக் கொண்டதாக நடத்தப்படும். இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்ட உரிமை கோரல்களின் அடிப்படையில் தேர்வர்கள் எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு முறை

தரவரிசை முறை – எழுத்துத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். ஒரே மதிப்பெண்கள் பெற்றவர்கள், குறிப்பான தகுதிகள் உள்ளிட்டவை தொடர்பான விளக்கக்ங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன.

சந்தேகம் தீர்க்க

ஏதாவது தெளிவுரை தேவை என்று நினைக்கும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரிலோ அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா எண் மூலமாகவோ அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் தொடர்பு கொள்ளலாம்.

ஒருமுறைப்பதிவு மற்றும் இணைய வழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களை helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பித் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். தபால் மூலமும் தொடர்பு கொள்ளலாம். தேர்வின் பெயர், அறிவிக்கை எண் மற்றும் ஆண்டு, பதிவு எண், தேர்வரின் முழுப் பெயர், விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முழுமையான முகவரி, சரியான மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை குறித்து அறிவிக்கையில் பிற்சேர்க்கை-1ல் முழுமையான விபரங்கள் உள்ளன. தேர்வு மையங்களும் தரப்பட்டுள்ளன. கவனமாக மையத்தின் பெயரும் அதன் எண்ணும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

அறிவிக்கை வெளியான நாள் – 06.10.2026

விண்ணப்பம் பெறத் தொடங்கும் தேதி – 06.10.2026

விண்ணப்பிக்கக் கடைசி நாள் – 05.11.2026, பிற்பகல் 11.59 மணி வரையில்

விண்ணப்பத் திருத்தம் – 09.11.2026 முற்பகல் 12.01 முதல் 11.11.2026 பிற்பகல் 11.59 வரை.

தேர்வு நாள் – 10.01.2027, முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 12.30 வரை.