தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

30 Oct 2026, 10:26 pm
திருச்சி விரைவு செய்திகள்

திருச்சி விரைவு செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 18,829 பேர் எழுதுகின்றனர்

விருதுநகர். அ க் .30-விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறவுள்ள தொகுதி-2மற்றும் 2ஏ தேர்வை 55 தேர்வு மையங்களில் 18,829 பேர் எழுத உள்ளனர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் நவம்பர் 1-ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல்12.30 மணி வரை தொகுதி-2 மற்றும் 2ஏ தேர்வுநடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 35 தேர்வுக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள 55 தேர்வு மையங்களில்மொத்தம் 18,829 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக 55 கண்காணிப்பு அலுவலர்கள், 6 ஆய்வு அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் 16 நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள், துணை ஆட்சியர் நிலையில் 13 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 55 தேர்வு மையங்கள் மற்றும் 6 மையக் கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள 61 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் வட்டத்தில் 10 தேர்வு மையங்களில் 3,222 பேரும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 12 தேர்வு மையங்களில் 3,257 பேரும், ராஜபாளையம் வட்டத்தில் 10 தேர்வு மையங்களில் 3,153 பேரும், சாத்தூர் வட்டத்தில் 5 தேர்வு மையங்களில் 1,491 பேரும், சிவகாசி வட்டத்தில் 9 தேர்வு மையங்களில் 2,884 பேரும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 9 தேர்வு மையங்களில் 2,822 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு மையங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மற்றும் தேர்வு அறை எண்கள் அடங்கிய அறிவிப்புப் பலகைகளைத் தெளிவாகவும், பெரிதாகவும் வைக்க வேண்டும். தேர்வர்கள் சிரமமின்றி தேர்வறைக்குச் செல்வதற்கு வழிகாட்டிப் பலகைகளும், தேர்வறைகளின்முன்பாக அறை எண்களும் தெளிவாக வைக்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்

பட்டுள்ளது.மேலும், தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாகவே தேர்வறைக்கு வந்துவிட வேண்டும். தேர்வர்கள் வந்த பின்னரே விடைத்தாள்கள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு தேர்வருக்கும் ஒரு விடைத்தாள் மட்டுமே வழங்க வேண்டும். விடைத்தாள் சேதமடைந்தாலோ அல்லது அச்சுப் பிழை இருந்தாலோ மட்டுமே மாற்று விடைத்தாள் வழங்க வேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாத தேர்வர்களைத் தேர்வு மையத்திற்குள் அனு

மதிக்கக் கூடாது.தேர்வு மையங்களுக்குள் கால்குலேட்டர், அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கொண்டு வர அனுமதிக்கக் கூடாது. தேர்வுக்கூடக்கண்காணிப்பாளர்களும் தேர்வறைக்குள் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது. தேர்வர்களின் வருகைப் பதிவேட்டை காலை 9.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்தம் அருகே கார் மோதி கணவன், மனைவி படுகாயம்

நத்தம்,அக்.30-திருச்சியை சேர்ந்தவர் பசுபதி(27). இவர் நேற்று காலை தனது பைக்கில் மனைவி சரிதாவுடன்(24) மதுரையில் இருந்து நத்தம் வழியாக திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். நத்தம் அருகே துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருமாள்பட்டி பிரிவுபகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே சென்னையில் இருந்துமதுரை நோக்கி சாகுல்அமீது(46) என்பவர் ஓட்டி சென்ற கார் இவர்கள்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி இருவருக்கும்பலத்த காயம் ஏற்பட்டு காலில் முறிவு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில்

கிடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்துநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டில் முதுகலை படிக்க முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித்தொகைவிண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

விருதுநகர்,அக்.30-வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில விரும்பும் சிறுபான்மையின முஸ்லிம் மாணவ, மாணவியர்களுக்குவழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 9 ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு அரசு சார்பில் 2026-2027 ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையின முஸ்லிம் மாணவர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயிலும் 10 மாணவர்களுக்கு தலா அதிகபட்சம் ரூ.36 லட்சம்வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு ஏற்கனவே அக்டோபர் 15 ஆம்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை www.bcmbcmw.tn.gov.in/welfschemes.minorities.htm என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு நவம்பர் 9 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.