தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குரூப்-2, 2ஏ தேர்வுவிருதுநகரில் 55 மையங்களில் 13,957 பேர் தேர்வு எழுதினர்

1 Nov 2026, 10:44 pm
குரூப்-2, 2ஏ தேர்வுவிருதுநகரில் 55 மையங்களில் 13,957 பேர் தேர்வு எழுதினர்

குரூப்-2, 2ஏ தேர்வுவிருதுநகரில் 55 மையங்களில் 13,957 பேர் தேர்வு எழுதினர்

விருதுநகர், நவ.1-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு விருதுநகர் மாவட்டத்தில் 55 மையங்களில் நடைபெற் றது. இத்தேர்வை எழுத 16,829 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 13,957 பேர் தேர்வில் பங்கேற்றனர். 2,872 பேர் தேர்வு எழுத வரவில்லை.சூலக்கரையில் உள்ள கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, வி.வி. வன்னியப்பெருமாள் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:விருதுநகரில் 10 மையங்களில் அனுமதிக்கப்பட்ட 3,222 பேரில் 2,649 பேர் தேர்வு எழுதினர்; 573 பேர் வரவில்லை. அருப்புக்கோட்டையில் 12 மையங்களில் 3,257 பேரில் 2,750 பேர் தேர்வெழுதினர்; 507 பேர் வரவில்லை.

இராஜபாளையத்தில் 10 மையங்களில் 3,153 பேரில் 2,618 பேர் தேர்வு எழுதினர்; 535 பேர் வரவில்லை. சாத்தூரில் 5 மையங்களில் 1,491 பேரில் 1,252 பேர் தேர்வெழுதினர்; 239 பேர் வரவில்லை.

சிவகாசியில் 9 மையங்களில் 2,884 பேரில் 2,358 பேர் தேர்வு எழுதினர்; 526 பேர் வரவில்லை. திருவில்லிபுத்தூரில் 9 மையங்களில் 2,822 பேரில் 2,330 பேர் தேர்வெழுதினர்; 492 பேர் வரவில்லை.தேர்வு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.