டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு தேனியில் 7,428 பேர் எழுதினர் மாவட்ட ஆட்சியர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு
1 Nov 2026, 10:27 pm

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு தேனியில் 7,428 பேர் எழுதினர் மாவட்ட ஆட்சியர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு

தேனி, நவ.1-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார் பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IIமற்றும் IIA (குரூப்-2, 2ஏ) முதல்நிலைத் தேர்வை, தேனி மாவட்டத் தில் மாவட்ட ஆட்சியர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேனி மேரி மாதா மெட் ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துதேவன்பட்டி சாந்தி நிகேதன் பப்ளிக் பள்ளி,கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல் லூரி ஆகிய தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டத்தில் தேனி வட்டத்தில் 23 மையங்களிலும், உத்தமபாளையம் வட்டத்தில் 9 மையங்களிலும் என மொத்தம் 32 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் 7,428 பேர் (80.46 சதவீதம்) தேர்வில் பங்கேற்றனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க 3 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 3 பறக்கும் படைகள், 8 நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் 3 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட் டக் கருவூலத்தில் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.மாற்றுத் திறனாளித் தேர் வர்கள் சிரமமின்றித் தேர்வு எழுதும் வகையில், அனைத்து மையங்களிலும் அவர் களுக்கான இருக்கைகள் தரைத்தளத்தில் ஒதுக்கப் பட்டிருந்தன.இந்த ஆய்வின்போது தேனி வட்டாட்சியர் ரத்தினம் உள்ளிட்ட அரசு அலுவலர் கள் உடனிருந்தனர்.