முந்தய பக்கம்

குரூப்-1 முதல்நிலைத் தேர்வு புதுக்கோட்டையில் 3,217 பேர் தேர்வு எழுதினர்

27 Sept 2026, 10:02 pm
குரூப்-1 முதல்நிலைத் தேர்வு புதுக்கோட்டையில்  3,217 பேர் தேர்வு எழுதினர்

குரூப்-1 முதல்நிலைத் தேர்வு புதுக்கோட்டையில் 3,217 பேர் தேர்வு எழுதினர்

புதுக்கோட்டை, செப். 27- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இத்தேர்வை எழுதுவதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 4,074 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு மையங்களுக்கு வந்த தேர்வர்கள், அனுமதிச் சீட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்குத் தேவை

யான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தேர்வு மையங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பறக்கும் படையினர் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. மேலும், பாதுகாப்புப் பணியில் காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

புதுக்கோட்டை பிரகதாம்பாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தேர்வை மாவட்ட ஆட்சியர் மு. அருணா ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் விண்ணப்பித்திருந்த 4,074 பேரில் 3,217 பேர் (78.96 சதவீதம்) தேர்வில் பங்கேற்றனர். 857 பேர் (21.04 சதவீதம்) தேர்வு எழுத வரவில்லை.

Share
FacebookXWhatsAppTelegram