குரூப்-1 தேர்வு தேதி மாற்றம்-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
17 Jul 2026, 10:13 am
<p>26 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வின் தேதி மாற்றப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னதாக செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குரூப்-1 முதல் நிலைத் தேர்வு, தற்போது செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>26 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் இந்தத் தேர்வுக்கான மற்ற அனைத்து வழிகாட்டுதல்களும் முந்தையபடி தொடரும் என்றும், தேர்வர்கள் திருத்தப்பட்ட தேர்வு தேதியை கருத்தில் கொண்டு தங்களது தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறும் டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.</p>
