தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப்–1 அறிவிப்பு: வெறும் 26 இடங்கள் தானா?

24 Jun 2026, 10:50 pm
டிஎன்பிஎஸ்சி குரூப்–1 அறிவிப்பு: வெறும் 26 இடங்கள் தானா?

டிஎன்பிஎஸ்சி குரூப்–1 அறிவிப்பு: வெறும் 26 இடங்கள் தானா?

சென்னை, ஜூன் 24 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளி யிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான குரூப்–1 தேர்வு அறிவிப்பில், வெறும் 26 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத் தை ஏற்படுத்தியுள்ளது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்துச் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செய லாளர் எஸ். கார்த்திக் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

தொடர்ந்து குறையும் பணியிடங்கள்

கடந்த 2022-இல் 92 பணியிடங்கள், 2024-இல் 90 பணியிடங்கள் மற்றும் 2025-இல் 70 பணியிடங்கள் என அறி விக்கப்பட்ட நிலையில், தற்போது 2026-இல் அது வெறும் 26 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகப் பொறுப்புகளுக்கான குரூப்–1 தேர்வை, ஒடுக்கப்பட்ட மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்கள் தங்களின் வாழ்வாதார வாய்ப்பாகக் கருதிப் பல ஆண்டுகளாகத் தயாராகி வருகின்றனர். இச்சூழலில், காலிப் பணியிடங்களைக் கடுமையாகச் சுருக்குவது அவர்களின் எதிர்கால நம்பிக்கையைச் சிதைப்பதாகும்.

வாக்குறுதியை நிறைவேற்ற தவெக அரசுக்கு வலியுறுத்தல்

தமிழக அரசுத் துறைகளில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதி கரித்து வரும் நிலையில், பணியிடங் களைச் சுருக்குவது நிர்வாகத்திற னை எவ்வகையிலும் மேம்படுத்தாது. தேர்தலுக்கு முன்பு இளைஞர் களுக்கான புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்குவோம் என்று வாக்கு றுதி அளித்துவிட்டு, தவெக அரசு தற்போது முதன்மைத் துறையான நிர்வாகத் துறையிலேயே பணியிடங் களை நிரப்பாமல் இருப்பது இளை ஞர்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்புகிறது. நேர்மையான மற்றும் வெளிப்படையான ஆட்சியை வழங்கு வதாகக் கூறும் அரசு, காலிப்பணி யிடங்களை நிரப்பாமல் சரியான நிர்வாகத்தை நடத்த முடியாது. இளையோருக்கு வேலை வாய்ப்பு வழங்குவது அரசின் சமூகப் பொறுப்பாகும். எனவே, தமிழக இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை வெளிப்படையாகக் கணக்கெடுத்து, குரூப்–1 தேர்விற்கான பணியிடங் களை உடனடியாக உயர்த்தி அரசு மறு அறிவிப்பை வெளியிடவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.