தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மீன்வள பொறியியல் படிப்பு முடித்தவர்களையும் நியமிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு எடுக்க வேண்டும்

17 Jul 2026, 8:29 pm
மீன்வள பொறியியல் படிப்பு முடித்தவர்களையும்  நியமிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு எடுக்க வேண்டும்

மீன்வள பொறியியல் படிப்பு முடித்தவர்களையும் நியமிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு எடுக்க வேண்டும்

நாகப்பட்டினம், ஜூலை 17 - தமிழ்நாடு மீன்வள பல்கலை க்கழகத்தில் மீன்வளப் பொறியியல் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பை முடித்துள்ளனர்.

இவர்களுக்கு எந்தவித வேலை வாய்ப்பையும் இதுவரை பல்கலை க்கழகமும், அரசுப் பணியாளர் தேர்வாணையமும் முடிவு செய்ய வில்லை.

அதே நேரத்தில் தற்சமயம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு எண்.737/ 2026 நாள் 07.07.2026-இன்படி மீன்வள உதவி ஆய்வாளர் மற்றும் உதவி மேலாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை விளம்பரம் அளித்துள்ளது.

இதில் மீன்வள பொறியியல் முடித்த மாணவர்கள் சேர்க்கப்பட வில்லை.

இதுகுறித்து மீன்வள பொறியியல் முடித்த மாணவர்கள் தெரிவித்துள்ள கருத்தின்படி, மீன்வள பொறியியல் முடித்த மாண வர்களையும் மீன்வளம் தொடர் பான அனைத்து பதவிகளுக்கும் பரிந்துரைக்க தமிழக அரசு உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 300 மாண வர்கள் மேற்கண்ட படிப்பை முடித்து எவ்வித வேலைவாய்ப்பும் இன்றி தவித்து வருகிறார்கள்.

எனவே தமிழக அரசும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையமும், மேற்கண்ட பணி யிடத்திற்கு மீன்வள பொறியியல் முடித்தவர்களும் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட படிப்பை உடனடியாக பல்கலைக் கழகத்தில் தடை செய்ய வேண்டும்.

ஏற்கெனவே கீதப்பிரியா என்ற மாணவி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில், மீன்வள பொறியியல் படிப்பின் அவசியம் குறித்தும், அவர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வில் அனுமதிப்பது குறித்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதனை ஆய்வு செய்து, உடனடியாக மேற்கண்ட விளம்பரத்தில் மீன்வள பொறியியல் முடித்த மாணவர்களை சேர்க்க உத்தரவிட வேண்டுமென மீன்வள பொறியியல் முடித்த முன்னாள் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவர்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும். - நாகை அ.தி.அன்பழகன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.