தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

17 Feb 2026, 3:36 pm
சென்னை விரைவு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி  தேர்வுக்கட்டுப்பாட்டு  அதிகாரி நியமனம்

சென்னை, பிப்.17- குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட ஹால்டிக்கெட் குளறுபடிகள் காரணமாக, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாற்றப் பட்டு காத்திருப்போர் பட்டி யலுக்கு அனுப்பப்பட்டார்.  அவருக்குப் பதிலாக ஸ்ரீ வெங்கடபிரியா ஐஏ எஸ் புதிய தேர்வுக் கட்டுப் பாட்டு அலுவலராக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பிரச்சனை தொடர்பாக ஏற்கெனவே சில அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒத்திவைக்கப் பட்ட தேர்வுகள் வரும் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை, பிப்.17- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீர மைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில் சேவைகளில் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5, 2026 வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11 ஆகிய நடைமேடைகளில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், அங்கிருந்து இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இனி 5 மற்றும் 6 ஆகிய நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். குறிப்பாக, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் விரைவு ரயில்கள் செல்லும் 6-வது நடைமேடையிலும், மறுமார்க்கமாக செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரும் ரயில்கள் 5-வது நடைமேடையிலும் இயக்கப்படும் என்றார்.

தங்கம் விலை  நிலவரம்

சென்னை, பிப்.17- சென்னையில் ஆப ரணத் தங்கத்தின் விலை செவ்வாயன்று கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்ற மின்றி ஒரு கிராம் ரூ. 265க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனை யாகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்துள்ளது.

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க அவகாசம் மேலும் நீட்டிப்பு

சென்னை, பிப்.17- குழந்தை பிறந்த 15 ஆண்டுகள் கடந்தும் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்களுக்கு, பெயரைப் பதிவு செய்ய வரும் செப்டம்பர் 26 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன் தெரிவித்துள்ளார். பொதுவாக, பிறப்பு பதிவான 12 மாதங்களுக்குள் கட்டணமின்றியும், 15 ஆண்டுகளுக்குள் ரூ. 200 அபராதத்துடனும் பெயர் சேர்க்க சட்டத்தில் வாய்ப்பு உள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு அவகாசத்தைப் பயன்படுத்தி, 15 ஆண்டுகள் கடந்தவர்களும் பள்ளி,கல்லூரி சான்றிதழ், ஆதார், ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் மண்டல அலுவலகங்களை அணுகி பெயருடன் கூடிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்தவர் நிலத்தை காட்டி ரூ.15 லட்சம் மோசடி

சென்னை, பிப்.17- சாலிகிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவரிடம், உத்திரமேரூர் அருகே உள்ள எலப்பாக்கத்தில் தனக்குச் சொந்தமான இரண்டு வீட்டு மனைகள் இருப்பதாகக் கூறி நிலத்தரகர் பாஸ்கரன் (51) அறிமுகமாகியுள்ளார். இதனை நம்பிய பாலச்சந்தர், அந்த மனைகளை ரூ.15 லட்சத்திற்கு விலை பேசி பணத்தைக் கொடுத்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.