விளையாட்டு
8 Aug 2026, 9:05 pm

விளையாட்டு

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் திருப்பூரை சமாளிக்குமா திருநெல்வேலி?

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் (டிஎன்பிஎல்) 10ஆவது சீசன் போட்டி கடந்த செவ்வாயன்றுதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேஉள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. ஆகஸ்ட் 28வரை நடைபெறும் இந்த தொடரின் 5ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, திருப்பூர் அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்்கல் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தி திருநெல்வேலி வெற்றி பெற்றது. இந்த 2 ஆட்டத்தில் சென்னை - திருப்பூர் அணிகளின் ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெற்றது.இந்நிலையில், விடுமுறை நாளானஞாயிறன்றும் 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் - சென்னை (9ஆவது லீக்) அணிகளும், 2ஆவது ஆட்டத்தில்திருநெல்வேலி - திருப்பூர் (10ஆவது லீக்) அணிகளும் மோதுகின்றன.இரண்டு ஆட்டங்களும் நத்தம் அருகே உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 10ஆவது லீக்ஆட்டத்தில் மோதும் 2 அணிகளும் அதிரடிக்கு பெயர் பெற்றது. இதனால் இந்த ஆட்டம்பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பும் திருப்பூரை, திருநெல்வேலி சமாளிக்குமா? என்ற எண்ணத்தில் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆட்டங்களும் என்பிஆர் கல்லூரி, நத்தம், திண்டுக்கல்

(நத்தம் - திண்டுக்கல் சாலையில் உள்ளது - புன்னப்பட்டி நிறுத்தம்)

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பேன்கோடு (ஓடிடி)

திண்டுக்கல் - சென்னை

நேரம் : மாலை 3:30 மணி

திருநெல்வேலி - திருப்பூர்

நேரம் : இரவு 7:30 மணி

டிக்கெட் : https://tnpl.com.in/tickets/ என்ற லிங்கை கிளிக் செய்யலாம். (ரூ.200 முதல் ரூ.500 வரை மட்டுமே - கேலரியை பொறுத்து விலை)

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்இறுதியில் இந்திய வீராங்கனை அஸ்மிதா சாலிஹா

முன்னணி பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான “கொரியா மாஸ்டர்ஸ் சூப்பர்300” தொடர் தென் கொரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்மிதா சாலிஹா 21-13, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் மற்றொரு இந்தியவீராங்கனையான ரக்சிதா ராம்ராஜை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஞாயிறன்று நடைபெறும்இறுதிப் போட்டியில் சீனாவின் ஹான் கியான்ஷியை அஸ்மிதா சாலிஹா எதிர்கொள்ள உள்ளார். அஸ்மிதா தனதுஅரையிறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த உள்ளூர் வீராங்கனையான ஜப்பானின்ஹினா அகேச்சியை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“உலகக்கோப்பையில் மெஸ்ஸிதான் சிறந்த வீரர்”

மெஸ்ஸியின் (அர்ஜெண்டினா கேப்டன்) ஓய்வு குறித்து அர்

ஜெண்டினா கால்பந்து சங்க தலைவர் கிளாடியோ டாபியா கூறுகையில்,“ஓய்வு முடிவு முற்றிலும் அவரது வசம்தான் உள்ளது. அது அவரது தனிப்பட்ட முடிவாகவே இருக்கும். இப்போது அவர் சற்று இளைப்பாற வேண்டும். 2022 உலகக்கோப்பை தொடரின் போது,அவர் 2026இல் விளையாடுவாரா என்பது எங்களுக்கு தெரியாது?அப்போது அவரிடம் கேட்ட போது ஒவ்வொரு ஆட்டமாக பார்க்கலாம் என்றார். அப்போது அந்த கட்டத்தில் அவரின்சிறந்த வெர்ஷனை நாம் பார்த்தோம். அவர் கால்பந்து விளையாட்டை அனுபவித்து விளையாட அனுமதிக்கவேண்டும். அதன் பின்னர் தனக்கு எது சரி என்பதை சரியான தருணத்தில் அவரே முடிவு செய்வார். நடந்து முடிந்தஉலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதை நாம் எல்லோரும் கண்டு மகிழ்ந்தோம்.அவரது செயல்பாட்டை எண்ணி பெருமை கொள்ள வேண்டும். இந்த உலகக்கோப்பையில் எங்களைபொறுத்தவரையில் அவரே சிறந்த வீரர். ஒவ்வொரு ஆட்டத்திலும் சாதனை படைத்தார்” என்று அவர் கூறினார்.