விளையாட்டு
7 Aug 2026, 11:01 pm

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் : இன்றைய ஆட்டங்கள்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் (டிஎன்பிஎல்) 10ஆவது சீசன் போட்டி செவ்வாயன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. ஆகஸ்ட் 28 வரை நடைபெறும் இந்த தொடரில் சனியன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டத்தில் மதுரை - கோயம்புத்தூர் அணிகளும் (7ஆவது லீக்), 2ஆவது ஆட்டத்தில் சேலம் - திருச்சி (8ஆவது லீக்) அணிகளும் மோதுகின்றன. இந்த இரண்டு ஆட்டங்களும் நத்தம் அருகே உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

மதுரை - கோயம்புத்தூர் நேரம் : மாலை 3:30 மணி

இரண்டு ஆட்டங்களும் என்பிஆர் கல்லூரி, நத்தம், திண்டுக்கல்

(நத்தம் - திண்டுக்கல் சாலையில் உள்ளது - புன்னப்பட்டி நிறுத்தம்)

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பேன்கோடு (ஓடிடி)

சேலம் - திருச்சி நேரம் : இரவு 7:30 மணி

மின்னல் தாக்குதலிலிருந்து தப்பித்த “மெஸ்ஸி அண்ட் கோ - சான் லூயிஸ் அணி”

அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ளது நு மைதானம். இந்த மைதானத்தில் இந்திய நேரப்படி வியாழனன்று இன்டர் மியாமி- சான் லூயிஸ் (லீக்ஸ் கோப்பை தொடரின்) அணிகள் மோதின. இந்த போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு களமிறங்கிய மெஸ்ஸி 2கோல்கள் அடித்து அணியின்வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

ஆனால் இந்த போட்டியின் இரண்டாவது பாதியில் திடீரென பலத்த மழை பெய்தது. பொதுவாக கால்பந்துபோட்டிகள் மழை பெய்தாலும் நடைபெறும். ஆனால் இன்டர் மியாமி - சான் லூயிஸ் 30 நிமிடங்கள் ரத்து செய்யப்பட்டன. போட்டி ரத்து செய்யயப்பட்ட நேரத்தில் மைதானத்தில் மின்னல் தாக்குதலும் இருந்தது. நல்வாய்ப்பாக இரு அணி வீரர்களும்மின்னல் தாக்குதலில் சிக்கவில்லை. போட்டியை தொடர்ந்து நடத்தியிருந்தால், தாய்லாந்து சம்பவம் போன்று நிகழ்ந்து இருக்கும்.

தமிழ்நாடு - இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அப்படி என்ன பிரச்சனை?

சமூக வலைத்தளங்களில் வருடம் முழுவதும் தமிழ்நாடு - இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் வார்த்தைமோதலுடன்தான் இருக்கிறார்கள். இந்தியா - இலங்கை அணிகள் நேரடியாக கிரிக்கெட் போட்டியில்விளையாடாவிட்டாலும் ரசிகர்களின் இந்த மோதல் போக்கு தீவிரமாக உள்ளது. “தீவு காரங்க (இலங்கை அணி)ரொம்பா பேசுறாங்க - அடுத்த மேட்ச் ல அவங்கள அடிக்கிற அடில சுனாமியே வந்துரும்” என தமிழ்நாடுரசிகர்களும், “இந்த புலி பாய்ஸ் (இந்தியா அணி) தொல்ல தாங்க முடியல” என இலங்கை நாட்டில் வசிக்கும் தமிழ்ரசிகர்களும் தினமும் மீம்ஸ் மூலம் மோதி வருகின்றனர். இந்த மோதலுக்கு அப்படி என்ன தான் காரணம் என்றால்,இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி வெடித்த போது அந்நாட்டு அணி பார்மின்றிசொதப்பியது. அப்போது தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள்,”எல்லாம் ஒருநாள் சரியாகும்” என்று ஆதரவுக்கரம்கொடுத்தனர். ஆனால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள்,”ஆட்சியையே மாற்றிவிட்டோம், இதை சரியாக்கமாட்டோமா?” என மோதல் போக்குடன் கருத்து தெரிவிக்க, கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு - இலங்கை ரசிகர்கள்எல்லாவற்றிற்கும் கருத்து மோதலை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இதனை நாடுகளுக்கு இணையானமோதலாக பார்க்க வேண்டாம். அது நன்றாக சிரிக்க வைக்கும் நகைச்சுவை மோதல்தான். அதனைப் படித்தாலேபுரியும்.