டிஎன்பிஎல் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
13 Dec 2025, 5:13 pm
<p><strong>டிஎன்பிஎல் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கரூர், டிச.13- தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றிய ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, டிஎன்பிஎல் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், புகளூர் காகித ஆலை வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் அரவிந்த் தலைமை வகித்தார். டிஎன்பிஎல் தொழிலாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் ஜி. ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். சங்கச் செயலாளர் மகேஷ், துணைத் தலைவர் அ. காதர்பாட்சா, அமைப்புச் செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் வெற்றிச் செல்வன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
