தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் வைரவிழா மாநில மாநாடு மதுரையில் வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம்
7 Jun 2026, 11:08 pm

தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் வைரவிழா மாநில மாநாடு மதுரையில் வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம்

மதுரை, ஜூன் 7- தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் வைரவிழா ஆண்டு மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதி களில் மதுரையில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டிற்கான வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் மதுரை மேலப் பெருமாள் மேஸ்திரி வீதியில் சனிக்கிழ மையன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சத்யநாராயணன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் விவேகானந்தன் வரவேற்புக் குழு நிர் வாகிகளை அறிமுகப்படுத்தி, மாநாட் டின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். மாநாட்டு புரவலராக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் டாக்டர் எல்.அருள் சுந்த ரேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். இணை புரவலர்களாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் எம்.எம். ரமேஷ் மற்றும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மதுரை கிளைத் தலைவர் டாக்டர் வி.என். அழகு வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராக மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி.நாகராஜன் தேர்வு செய்யப்பட்டார். வரவேற்புக் குழு செய லாளராக சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் ஆர். கோபிநாத், பொருளா ளராக மாநில செயலாளர் எஸ்.பி.சிவ குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின், மாநிலக் குழு உறுப்பினர் இரா.தெய்வராஜ் மற் றும் பல்வேறு தோழமை அமைப்பு களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகர ணங்களுக்கான ஜிஎஸ்டி வரியை முழு மையாக நீக்க வேண்டும், தரமான மருந்துகள் சலுகை விலையில் கிடைக்க வேண்டும், உற்பத்தி விலை யை அடிப்படையாகக் கொண்டு மருந்துகளின் விற்பனை விலையை நிர்ணயிக்க வேண்டும், ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நடைபெற வுள்ள வைரவிழா மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து கூட்டத் தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.