தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாடு மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்றது

17 Aug 2026, 10:58 pm
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாடு  மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்றது

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாடு

மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்றது

மதுரை, ஆக. 17-தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் வைர விழா ஆண்டு மற்றும் 31-வது மாநில மாநாட்டின் பொதுமாநாட்டுத் தொடக்க நிகழ்வு ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.சத்ய நாராயணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.விவேகானந்தன் முன்னிலை வகித்தார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் எல்.அருள் சுந்தரேஷ் குமார் புரவலர் உரையாற்றினார். மதுரை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) டி.நாகராஜன் தலைமையுரை ஆற்றினார். சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன் மாநாட்டைத் தொடங்கி வைத்துச் சிறப்புத் தொடக்கவுரையாற்றினார். மேலும், முன்னாள் அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், அகில இந்தியச் செயலாளர் ஆர்.கருமலையான், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், செயலாளர் கே.சி.கோபிகுமார், சிஐடியு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் இரா. லெனின் உள்ளிட்ட பலரும் சகோதரத் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். வரவேற்புக் குழுச் செயலாளர் ஆர்.ஆர்.கோபிநாத் நன்றியுரை ஆற்றினார்.

தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள்

மருத்துவ விற்பனைப் பிரதிநிதிகளின் பணிநேரம், பணிச்சுமை, ஓய்வு, விடுப்பு மற்றும் பணியிடப் பாதுகாப்பு உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகளை முழுமையாக உறுதி செய்யும் வகையிலான சட்டப்பூர்வ பணி விதிகளை ஒன்றிய அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்தியுள்ளது. களப்பணியாளர்களின் தற்போதைய குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,444-ல் இருந்து ரூ.26,910 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் எனவும், இதற்கான உரிய குழுவை விரைவில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இலாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், மக்களின் சுகாதாரத் தேவைகளை முதன்மையாகக் கொண்ட தேசிய மருந்துக் கொள்கையை ஒன்றிய அரசு வகுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கைப்பேசி செயலிகள், ஜிபிஎஸ், இணையவழி கூட்டங்கள் மற்றும் நிகழ்நேர அறிக்கைகள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தொழிலாளர்களைக் கண்காணிக்கும் முறையைக் கைவிட வேண்டும்; மேலும், தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் புதிய தொழில்நுட்பங்களைச் திணிக்கக் கூடாது என மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அளவுக்கு மீறிய விற்பனை அழுத்தத்தால் ஏற்படும் பணிச்சுமையைக் குறைப்பதோடு, பணியின்போது விபத்து அல்லது இதர காரணங்களால் உயிரிழக்கும் களப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 25 லட்சம் ரூபாய் இழப்பீடும், உரிய சட்டப்பூர்வ பணப்பலன்களும் வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி ஆர்டர் பெறுதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத தள்ளுபடி போன்ற முறையற்ற வர்த்தக நடைமுறைகளைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அனைத்து நிறுவனங்களிலும் 8 மணி நேர வேலை உரிமையை நடைமுறைப்படுத்தவும், பணி நியமன ஆணை, வருங்கால வைப்பு நிதி, போனஸ், பணிக்கொடை உள்ளிட்ட அனைத்துச் சட்டப்பூர்வ உரிமைகளையும் உறுதிப்படுத்தவும் கோரப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களைச் சந்தித்து அறிவியல் தகவல்களை வழங்கும் களப்பணியாளர்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும், பொதுத்துறை மருந்து நிறுவனங்களை வலுப்படுத்தி அத்தியாவசிய மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூடுதலாக, புதுச்சேரி கிளை தனி மாநில சங்கமாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நிர்வாகிகள் தேர்வு

வைர விழா ஆண்டைக் கொண்டாடும் இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 17 நிர்வாகிகளும், 11 மாநிலக் குழு உறுப்பினர்களும், ஒரு உள் தணிக்கையாளரும் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் புதிய மாநிலத் தலைவராக திலீப் மேனனும், மாநிலப் பொதுச் செயலாளராக விவேகானந்தனும், மாநிலப் பொருளாளராக நாகராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.