முந்தய பக்கம்

அரசு ஊழியர் சங்கம் வழக்கில் வெற்றி!

23 Jun 2026, 10:57 pm
அரசு ஊழியர் சங்கம் வழக்கில் வெற்றி!
<p><strong>அரசு ஊழியர் சங்கம் வழக்கில் வெற்றி!</strong></p><p>சென்னை, ஜூன் 23 - 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் 1984-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (டிஎன்ஜிஇஏ) தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், சங்கத்திற்கு சாதகமான தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை செயல்பாடற்றதாக அறிவித்த 2014-ஆம் ஆண்டு அரசாணையை எதிர்த்து, சங்கம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இம்மனுவை 2023 நவம்பரில் பதிவுத்துறை இயக்குநர் நிராகரித்தார். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கையும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் என்ற பெயரிலேயே வேறொரு சங்கம் பதிவு செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில், கடந்த ஜூன் 19 அன்று அவசர வழக்காக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த பதிவுத்துறை இயக்குநரின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் சங்கத்தின் மேல்முறையீட்டின் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கவும், அந்த உத்தரவின் அடிப்படையில் எதிர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெயரை பயன்படுத்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் ஆணையிட்டது. இது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக அமைந்துள்ளது. இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram