அரசு ஊழியர் சங்க ஓமலூர் வட்டப் பேரவை
yesterday
<p><strong>அரசு ஊழியர் சங்க ஓமலூர் வட்டப் பேரவை</strong></p><p>சேலம், ஜூன் 21- அரசு ஊழியர் சங்க ஓம லூர் வட்டப் பேரவையில், நிர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட் டம், ஓமலூர் வட்டப் பேரவை, வட்டத் தலைவர் வெ.சீனிவாசன் தலைமை யில் சனியன்று கிராம நிர் வாக அலுவலர்கள் சங்க கட்டிடத்தில் நடை பெற்றது. முன்னதாக, ஓமலூர் நெடுஞ் சாலைத்துறை அலுவலகம் முன்பிருந்து துவங்கிய பேரணியை அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வெ.அர்த்தநாரி துவக்கி வைத்தார். இறுதியில், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பதாகையும், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பதாகையும் ஏற்றி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடை பெற்ற பேரவையில், மாவட்ட இணைச்செய லாளர் தா.கலைவாணன் அந்தோணி துவக்க வுரையாற்றினார். வட்டச் செயலாளர் சி.ராஜ சேகரன் அறிக்கையை முன்வைத்தார். ஓம லூர் வட்டாட்சியர் சி.பார்த்தசாரதி, சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பு.சுரேஷ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூ திய திட்டத்தை காலம் தாழ்த்தாமல் உடனடி யாக அறிவிக்க வேண்டும். வேலையில்லா இளைஞர்களை, காலியாக உள்ள அரசுப் பணியிடங்களில் நியமனம் செய்து, வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங் களை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக வெ.சீனி வாசன், செயலாளராக சி.ராஜசேகரன், பொருளாளராக ரா.தினேஸ்வரன் உள்ளிட் டோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
