தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்வாரியத் டெண்டர்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய குழுக்கள் அமைப்பு

30 May 2026, 9:33 pm
மின்வாரியத் டெண்டர்களில் வெளிப்படைத்  தன்மையை உறுதி செய்ய குழுக்கள் அமைப்பு

மின்வாரியத் டெண்டர்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய குழுக்கள் அமைப்பு

சென்னை, மே 30 - தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் வழங்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந் தங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களில் எந்தவொரு டெண்டரையும் வெளியிடுவதற்கு முன்பாக மூன்று குழுக்கள் கட்டாயம் ஆய்வு மேற்கொள்ள வேண் டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

சந்தைப் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு சரி பார்ப்புக் குழு உள்நாட்டு சந்தை விலை நிலவரங் களை ஆய்வு செய்யும்.

உற் பத்தியாளர் மதிப்பீட்டுக் குழு வெளிநாட்டு சந்தை நில வரங்களோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும்.

குறுக்கு சரிபார்ப்புக் குழு பிற மாநில மின்வாரியங்கள் இதே பொருட்களை என்ன விலைக்குக் கொள்முதல் செய்கின்றன என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்.

முதல் இரண்டு குழுக் களின் அறிக்கைகள் கிடைத்த ஏழு நாட்களுக்குள் குறுக்கு சரிபார்ப்புக் குழு தனது இறுதி அறிக்கையை அளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப் பட்டு இறுதி செய்யப்படாத டெண்டர்களும் இந்த மூன்று குழுக்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மின்வாரியம் உத்தர விட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.