ஓய்வூதியத்திற்கு நிர்வாகம் உத்தரவாதம் தர வேண்டும்: மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கை
11 hours before

ஓய்வூதியத்திற்கு நிர்வாகம் உத்தரவாதம் தர வேண்டும்: மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கை

சென்னை, செப்.5-ஓய்வூதியத்திற்கு நிர்வாகம் உத்தரவாதம் தர வேண்டுமென்று தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியறுத்தி உள்ளது.அமைப்பின் தென்சென்னை கிளை-2ன் 6வது திட்டப் பேரவை சனிக்கிழமையன்று (செப்,5) கிண்டி யில் நடைபெற்றது. இந்த பேரவையில், முத்தரப்பு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும், 70வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு கூடுத லாக 10 விழுக்காடு ஓய்வூதியம் வழங்கவேண்டும்,

மருத்துவக் காப்பீடு திட்டத்தை நிர்வாகமே ஏற்று நடத்த வேண்டும், விதவை, விவாகரத்தான பெண்க ளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திட்டத் தலைவர் ஆர்.லாரன்ஸ் சகாய ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்,சங்க கொடியை துணைத்தலைவர் வி.தியாகராஜன் ஏற்றினார். இணைச்செயலாளர் எஸ்.ராஜா அஞ்சலிதீர்மானத்தை வாசித்தார். இணைச்செயலாளர் டி.உதய குமார் வரவேற்றார். மாநில துணைச்செயலாளர்ஆர்.ராமநாதன் துவக்கவுரையாற்றினார்.திட்டச் செயலாளர் டி.அன்பழகன் வேலை அறிக்கையும், பொருளாளர் இ.சக்திவேல் வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். மாநில பொரு ளாளர் ஏ.பழனி, சென்னை மண்டலச் செயலாளர் கே.ஆர்.முத்துசாமி, மூத்த தலைவர் எஸ்.அப்பனு, மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளை-2ன் தலைவர் பி.டில்லிக்குமார் ஆகி யோர்வாழ்த்திப் பேசினர். மாநில செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் நிறைவுரையாற்றினார். திட்டஇணைச்செயலாளர் டி.கே.ரவிக்குமார் நன்றி கூறினார்.திட்டத் தலைவராக ஆர்.லாரன்ஸ் சகாய ஆரோக்கியராஜ், செயலாளராக டி.அன்பழகன், பொரு ளாளராகஇ.சக்திவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.