முந்தய பக்கம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

8 Oct 2026, 3:07 am
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
<p><strong>ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்</strong></p><p>ஈரோடு, அக்.7-ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின், ஈரோடு மின்விநியோக வட்டக்கிளையின் 20 ஆவது ஆண்டு பேரவை, ஈரோடு கூடலிங்கம் திடலில் நடைபெற்றது. தலைவர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். சி.ஜோதிமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். துணைச்செயலாளர் எஸ்.ஆர்.குருசாமி வரவேற்றார். மண்டலச் செயலாளர் பி.சி.சேப்பெருமாள் துவங்கவுரையாற்றினர். செயலாளர் எம்.ஆர்.பெரியசாமி, பொருளாளர் கே.ஆர்.சண்முகம் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநிலச் செயலாளர் என்.நடராஜன் சிறப்புரையாற்றினார். எப்சிபிஏ கன்வீனர் சி.பரமசிவம், சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் பி.ஸ்ரீதேவி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். 8ஆவது ஊதியக்குழுவின் பணப்பயன்கள் அனைத்து ஓய்வதியர்களுக்கும் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர் பணிக்காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக கே.குப்புசாமி, செயலாளராக எம்.ஆர்.பெரியசாமி, பொருளாளராக கே.ஆர்.சண்முகம், துணைத்தலைவர்களாக 6 பேர், துணைச்செயலாளர்களாக 5 பேர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 5 பேர் உட்பட 19 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram