குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.1.5 லட்சமாக உயர்த்துக! மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின்தென்காசி மாநாடு
20 Aug 2026, 10:17 pm

குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.1.5 லட்சமாக உயர்த்துக! மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின்தென்காசி மாநாடு

கோரிக்கைதென்காசி, ஆக. 20-தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தென்காசி மாவட்ட மாநாடு சங்கரன்கோவிலில் நடைபெற்றது.மாநாட்டிற்கு மாவட்டத்தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். எஸ்.சுப்பையா கொடியேற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் எஸ். அயூப்கான் வரவேற்றார். எச். சுந்தரராஜன் அஞ்சலி தீர்மானத்தைவாசித்தார். மாநிலத்துணைத் தலைவர் எம்.ஜெயபாண்டி தொடக்க உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் செயலாளர் அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் சி. கணபதி பொருளாளர் அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

மாநிலத் துணைச் செயலாளர் என்.செல்வராஜ், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ராஜாமணி ஆகியோர்சிறப்புரையாற்றினர்.வெங்கடசுப்பிரமணியன் நன்றி கூறினார்.நிர்வாகிகள் தேர்வுமாநாட்டில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத்தலைவராக எஸ்.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளராக எஸ்.ராமச்சந்திரன், பொருளாளராக சி.கணபதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மின்துறையை பொதுத்துறையாக தொடர்ந்து நீடிக்கச் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை தமிழக அரசேநேரடியாக வழங்கும்வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். 8-வது ஊதியக் குழுவின்பணப்பயன்களைஅனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.