முந்தய பக்கம்

மின்வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பு பேரவை

13 hours before
மின்வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பு பேரவை

மின்வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பு பேரவை

தருமபுரி, செப்.9-மின்வாரிய ஊழியர்கள் ஓய்வுபெறும் தினத்தன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும் என மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தருமபுரி மாவட்ட 26 ஆவது ஆண்டு பேரவைக்கூட்டம், தருமபுரி ஐஎம்ஏ ஹாலில்செவ்வாயன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் சி.சுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஜி.பி.விஜயன், பொருளாளர் எம்.சின்னசாமி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநில துணைத்தலைவர் ஜி.பஷீர் சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில், மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். ஓய்வூதியசட்டத்திருத்தத்தை ரத்து செய்து, அனைத்துஓய்வூதியர்களுக்கும் 8 ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர் பணிக்காலத்தை கணக்கில் எடுத்து, ஓய்வூதியம் திருத்தம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் தினத்தன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆர்.சுந்தரமூர்த்தி, மாவட்டச்செயலாளராக ஜி.பி.விஜயன், பொருளாளராக எம்.சின்னசாமி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட துணைத்தலைவர் சி.ரகுபதி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram