தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ. 10 ஆயிரம்! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

5 Jul 2026, 10:39 pm
மின்மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ. 10 ஆயிரம்!  தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு
<p><strong>மின்மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ. 10 ஆயிரம்! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு</strong></p><p>சென்னை, ஜூலை 5 - தமிழ்நாட்டில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள், புதிய மொபைல் போன் வாங்குவதற்கு ரூ. 10,000 வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. வீடுகள், தொழிற்சாலைகள், வணிகக் கட்டிடங்கள் என அனைத்திற்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் மின்சார வாரி யம், துல்லியமான மீட்டர் ரீடிங்கிற்காக ஊழியர்கள் மொபைல் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கேற்ப புதிய மொபைல் போன் மற்றும் சிம் கார்டு வாங்குவதற்கு இந்த நிதி உதவியை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் பணி எளி தாக்கப்படுவதுடன், டிஜிட்டல்மயமாக்கலும் ஊக்குவிக்கப்படும் என்று கழகம் தெரிவித்து உள்ளது. மேலும், தடையற்ற இணைய இணைப்பு மற்றும் அழைப்பு வசதிக்காக போஸ்ட் பெய்ட் சியுஜி சிம் கார்டுகளும் ஊழி யர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித் துள்ளது. இதன் மூலம் மீட்டர் ரீடிங் பணிகளில் தாமதம் தவிர்க்கப்பட்டு, நுகர்வோரின் மின் பயன்பாட்டு விவரங்கள் உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி உதவியை ஒருமுறை பெற்றுக் கொண்ட ஊழியர்கள், மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே இவ்வசதியைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.