முந்தய பக்கம்

ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

8 Jun 2026, 11:36 pm
ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!
<p><strong>ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!</strong></p><p>சென்னை, ஜூன் 8 - தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை யகத்தில் இருந்து ஹார்டு டிஸ்க்குகள் திரு டப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை, அண்ணாசாலையிலுள்ள தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில், கணிப்பொறி பிரிவில் 34 ஹார்டு டிஸ்க்குகள் அண்மையில் திருடு போன சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரி லலிதா, கடந்த ஜூன் 1 அன்று அளித்த புகாரின்பேரில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில் கணினி பராமரிப்பு பொறியாளராக பணியாற்றிய அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (31) கைது செய்யப் பட்டார். அவரிடமிருந்து 34 ஹார்டு டிஸ்க்கு கள் கணினி இயக்கத்துக்கு பயன்படுத்தப் படும் 20 ‘ராம்’-கள் ஆகியவை மீட்கப் பட்டன. ஹார்டு டிஸ்குகளை ரூ. 75 ஆயிரம் என்ற விலைக்கு வாங்கிய முரளி மனோகர் (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், சென்னை காவல்துறை, டிஜிபியிடம் அளித்த பரிந்துரையின் பேரில், ஹார்டு டிஸ்க் திருடு போன வழக்கானது, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram