மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்கள் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
16 Jun 2026, 11:04 pm
<p><strong>மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்கள் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருச்சிராப்பள்ளி, ஜுன் 16- பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், டி.என்.இ.பி. எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திருச்சி பெருநகர் வட்டக் கிளை சார்பில், தென்னூரில் உள்ள மின்வாரிய தலை மைப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மெட்ரோ சங்கத் தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார். கோரிக்கையை விளக்கி மண்டலச் செயலாளர் காளிதாஸ், செயலாளர் சிவச்செல்வன், மணப்பாறை செயலாளர் அன்புச் செல்வன், கிழக்குக் கோட்டச் செயலாளர் மணி ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் தனராஜ், பாண்டியன், துறையூர் சிவராஜ் உள்பட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டு, கைது நடவடிக்கைக்கு எதிராகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.</p>
