தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்வாரிய எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்

15 Jun 2026, 10:53 pm
மின்வாரிய எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்
<p><strong>மின்வாரிய எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்</strong></p><p>வாலிபர் சங்கம் வலியுறுத்தல் விருதுநகர், ஜூன் 15- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலி யாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதோடு, கள உதவியாளர் பணிக் கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரியத் தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கள உதவியாளர் பணியிடங் களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) மூலம் கடந்த 2025 நவம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் 9,600 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தற்போது 1,796 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2019-ஆம் ஆண்டு 2,900 கள உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்ட நிலை யில், கொரோனா காலச் சூழலை காரணம் காட்டி அந்த நடவடிக்கை நிறுத்தி வைக் கப்பட்டது. இதனையும், தற்போதைய மின்துறை பணியாளர் பற்றாக்குறை மற்றும் மின் விநியோகச் சவால்களையும் கருத்தில் கொண்டு, அறிவிக்கப்பட்டுள்ள 1,796 பணியிடங்களின் எண்ணிக்கையை 9,600 ஆக உயர்த்த வேண்டும். போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் தொடர் மின் தடைகள் மற் றும் மின் விபத்துகள் ஏற்படுவதாக மின் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மின்சார வாரியத்தில் காலி யாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதோடு, எழுத்துத் தேர் வில் தேர்ச்சி பெற்ற 9,600 பேருக்கும் பணி வழங்க அரசு மற்றும் மின்சார வாரியம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பர மேஸ்வரன், மாவட்ட பொருளாளர் மனோ பிரியா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து கணேஷ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சி யரை நேரில் சந்தித்து மனுவை வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.