ஸ்மார்ட் மீட்டர் ; தனியார்மயத்துக்கு எதிராக நவம்பரில் வேலைநிறுத்தம்!தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு அறிவிப்பு
8 Oct 2026, 10:59 pm

ஸ்மார்ட் மீட்டர் ; தனியார்மயத்துக்கு எதிராக நவம்பரில் வேலைநிறுத்தம்!தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு அறிவிப்பு

சென்னை, அக். 8 -‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தைரத்து செய்யக் கோரி, மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், நவம்பர் முதல் வாரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கப்படும் என்றும்தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியஅமைப்பு (சிஐடியு) அறிவித்துள்ளது.இதுகுறித்து அமைப்பின் பொதுசெயலாளர் தி. ஜெய்சங்கர், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமைசெய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலவச மின்சாரம், வேலைவாய்ப்பு பறிபோகும்

ஸ்மார்ட் மீட்டர் பொருத்து வதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருப்பது, மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையாகும். இதனால் 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயத்துக் கான இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளும், 14 வகையான மின் பயன்பாடுகளுக்கான அரசு மானியங்களும் பாதிக்கப்படும்.பயன்படுத்திய மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்தும் முறைக்குப் பதிலாக, பயன்படுத்த உள்ள மின்சாரத்துக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும். ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் வேலை இழப்பதுடன், இளைஞர் களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப் படும்.மாநில உரிமைகள், இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கும் பாதிப்பு ஏற்படும்.

மீட்டருக்கும் மாத வாடகை

தமிழகத்தில் 1.30 கோடி பேர் 200 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம்பயன்படுத்துகின்றனர். இவர்களின் வீடுகளில் சுமார் ரூ.5,500 மதிப்புள்ள ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி, மாதம் ரூ.450 வரை வாடகை வசூலிக்கும் நிலை ஏற்படும். இலவச மின்சாரம் பெறுவோர் இதை எவ்வாறு செலுத்த முடியும்?

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் மின் கட்டணம் உயரும். சிறு, குறு தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள தமிழகம் பின்தங்கும் என்றும் அவர் தெரிவித்தார். மின்வாரியத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்ற அரசின் நிலைப்பாட்டு க்கு இது முரணானது. இந்த பாதகமான ஒப்பந்தப் புள்ளியைத் திரும்பப்பெற்று, கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு பின்பற்றும் ‘கேப்டெக்ஸ்’ முறையில் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.

தொடர் போராட்டம்

இக்கோரிக்கைகளை முன்வைத்து, அக். 8-ல் மாநிலம் முழுவதும் 2,852 பிரிவு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்தொடர்ச்சியாக அக். 12–14-ல் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங் கள், அக். 15-ல் வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்புஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அக். 22–29 வரை மக்கள் சந்திப்பு இயக்கமும், தொடர்ந்து நவம்பர் முதல் வாரத்தில்காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடைபெறும்.இவ்வாறு தி. ஜெய்சங்கர் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் அமைப்பின் தலைவர் எஸ். கண்ணன், பொருளாளர் எம். வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.