முந்தய பக்கம்

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

29 Sept 2026, 11:40 pm
மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை, செப்.29-மின் கணக்கீடு பணியை தனியாரிடம் கொடுப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியுதமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் கணக்கீடு செய்யும் பணியை தனியாரிடம் கொடுப்பதை உடனடியாக கைவிடவேண்டும். மின் வாரியத்தில் எப்டிஎப் ஒப்பந்தமுறையை கைவிட வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் தனியார்மய கொள்கையை தமிழக அரசு பின்பற்றுவதைகைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோவை மாநகர், தெற்கு மற்றும் வடக்கு கிளைகள் சார்பில் கோவைடாடாபாத் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் டி.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்மண்டலச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் எஸ்.கலைச்செல்வி, தெற்கு வட்டக்கிளை தலைவர் பிகாளிமுத்து, மாநகர் கிளைத் தலைவர் ஆர்.காளிமுத்து, தெற்கு வட்டக்கிளை செயலாளர் என். ரத்தினகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram