முந்தய பக்கம்

நடவடிக்கை எடுத்த மின்வாரியம்: முற்றுகை ஒத்திவைப்பு

2 Jun 2026, 10:14 pm
நடவடிக்கை எடுத்த மின்வாரியம்: முற்றுகை ஒத்திவைப்பு
<p><strong>நடவடிக்கை எடுத்த மின்வாரியம்: முற்றுகை ஒத்திவைப்பு</strong></p><p>உடுமலை, ஜூன் 2- மின்வாரிய அலுவலகத்தில் முறை கேடுகளை தடுக்க வலியுறுத்தி, விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் அறிவிக் கப்பட்ட முற்றுகை போராட்டம் தற் காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்ட மின்வாரிய அலுவலகங்களில் லஞ்ச, ஊழல், முறைகேடுகளை தடுக்க வேண்டும். மேலும், தவறு செய்யும் அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி செவ்வாயன்று மின்வாரிய அலு வலகம் முற்றுகையிடப்படும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் அறி வித்தனர். இதன் தொடர்ச்சியாக மடத் துக்குளம் வட்டாட்சியர் தலைமையில் திங்களன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மின்வாரிய அதி காரிகள், காவல் துறையினர், விவசாயி கள் சங்க மாவட்டப் பொருளாளர் பால தண்டபாணி, தாலுகா செயலாளர் வீரப் பன், தலைவர் வெள்ளியங்கிரி உள் ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் விவ சாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கை யில், விவசாயிகள் பயன்படுத்தும் வகையில், தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்குவது, மின் மாற்றிகள் (டிரான்ஸ் பார்மர்) பழுது ஏற்பட்டால் புதிய மின்மாற்றி வைக்கும் போது விவ சாயிகளிடம் பணம் வசூல் செய்யப் படாது. மின் ஊழியர்கள் தவறு குறித்து புகாரளித்தால் உடனடியாக துறை ரீதி யான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் எழுத்து பூர்வ மாக உறுதியளித்தனர். அதன்பேரில், முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது, என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram