குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்குக! ஆக.4 மாவட்டத் தலைநகரங்களில் நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆர்ப்பாட்டம்
11 Jul 2026, 9:35 pm
<p><strong>குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்குக! ஆக.4 மாவட்டத் தலைநகரங்களில் நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருச்சிராப்பள்ளி, ஜூலை 11 - சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை திருச்சி யில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலை வர் வீ.குமார் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.புவனேஸ்வரன் வேலை அறிக்கையையும், மாநிலப் பொரு ளாளர் எம்.ஏழுமலை வரவு-செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் என்.ராசப்பன் சிறப்புரை யாற்றினார். நெல் கொள்முதல் நிலையங்களில் பணி யாற்றி வரும் பட்டியல் எழுத்தர், எடையாளர் மற்றும் காவலர் உள்ளிட்ட தற்காலிகப் பணி யாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் கள், பல வருடங்களாகப் பணி நிரந்தரம் இன்றி குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு இவர்களை உடனடியாகப் பணி வரன் முறைப்படுத்த வேண்டும். 10 ஆண்டுகள் பணிபுரிந்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இளஞ்சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக இந்த அட்டை வழங்கப்படு வதில்லை. எனவே, சுமைப்பணி தொழி லாளர்களுக்கு உடனடியாக இளஞ்சிவப்பு அட்டை வழங்குவதோடு, அவர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயித்து வழங்க வேண்டும். ‘தாயுமானவர்’ திட்டத்தில் உள்ள குளறு படிகளைக் கலைந்து, அத்திட்டம் முறையாக வும், முழுமையாகவும் செயல்பட வாணிபக் கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தால் ஏழை-எளிய மக்கள், விதவைகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் போதிய உணவுப் பொருட்கள் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, ஒன்றிய அரசு இந்தச் சட்டத் திருத்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 4 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. திருச்சி மண்டலத் தலைவர் வேலு நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாநில நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.</p>
