முந்தய பக்கம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

8 Aug 2026, 12:07 am
நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக.7-பருவகால பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை மாற்றியமைத்திட வேண்டும் என வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத்தொழிலாளர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலிப்பணியிடங்களை நிர்ப்பிட வேண்டும். 2013 முதல் பணிபுரியும் பருவகால பணியாளர்களை, தற்போது காலியாக உள்ள பணியிடங்களில் நிரந்தரப்படுத்த வேண்டும். பருவகாலபணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை மாற்றியமைத்திட வேண்டும். கொள்முதல் நிலையங்களில் கொள்முதல்செய்த நெல்முட்டைகளை 48 மணி நேரத்திற்குள் இயக்கம் செய்யாவிட்டால், அதனால் ஏற்படும் இழப்பை நிர்வாகமே ஏற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நுகர்பொருள் வாணிபக் கழக கோவை மாவட்ட அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்மண்டலத் தலைவர் பி. கார்த்திகேயன் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எம்.எழுமலை, மண்டலச் செயலாளர் எம்.திருக்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதில், மண்டலப் பொருளாளர் கே. சினிவாசன் மற்றும் மண்டல துணைத் தலைவர்கள், மண்டல துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட திரளான ஊழியர்கள் பங்கேற்றனர். நிறைவாக மாவட்ட நிர்வாகி வி. செல்வதுரை நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram