தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேளாண் படிப்புகளுக்கான விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி நாள்!

22 May 2026, 11:35 pm
வேளாண் படிப்புகளுக்கான விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி நாள்!

வேளாண் படிப்புகளுக்கான விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி நாள்!

கோவை, மே 22- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான இளமறிவி யல் (B.Sc) வேளாண் பட்டப்படிப்புகள் சேர்க்கைக் கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்த வேளாண் பல்கலை கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 பாடப்பிரிவுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 3 பாடப்பிரிவுகள் என மொத்தம் 17 இளமறிவி யல் வேளாண் படிப்புகளுக்கு மாணவர்கள் விண் ணப்பிக்கலாம்.

http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் ஜூன் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண் டும்.

மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்க ளின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்று ஆகிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாணவர்கள் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டி யல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்.

அதன் பின்னர், தகுதியுள்ள மாணவர்களுக்கு இணைய வழி கலந்தாய்வுகுறித்த விபரங்கள் மின்னஞ் சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவிக்கப் படும்.

மேலும், இணையவழி கலந்தாய்வில் பங் கேற்க, திரும்பப் பெற இயலாத கட்டணமாகப் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ரூ.3,000-யும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் ரூ.1,500-யும் செலுத்த வேண்டும்.

இக்கட்ட ணத்தை செலுத்தாதவர்கள் கலந்தாய்வில் பங் கேற்க முடியாது.

சேர்க்கைக் கட்டணம் மற்றும் ஆவண சரிபார்ப்பு: கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெறும் மாணவர் கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்னதாக, சேர்க்கை கட்டணமாக ரூ.20,000-ஐ இணையவழி யில் செலுத்த வேண்டும்.

இந்த தொகையை செலுத்திய பின்னரே தற்காலிக ஒதுக்கீட்டுக் கடி தத்தை பதிவிறக்கம் செய்ய முடியும்.

சான்றிதழ் சரிபார்ப்பின் போது தவறான தகவல்கள் கண்ட றியப்பட்டாலோ, உரிய நேரத்தில் சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறினாலோ இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.

மேலதிக இடங்களுக்குக் காத்திருப்பவர்கள் தகுதிக்கேற்ப புதிய கல்லூரி அல்லது பாடப்பிரிவு களைப் பெறலாம்.

இது குறித்த கூடுதல் விபரங்க ளுக்கு வார நாட்களில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்: 94886 35077, 94864 25076, அண் ணாமலைப் பல்கலைக்கழகம்: 98657 03537 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.