தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2026-2027 ஒருங்கிணைந்த இளமறிவியல் மாணவர் சேர்க்கை

7 May 2026, 11:55 pm
2026-2027 ஒருங்கிணைந்த இளமறிவியல் மாணவர் சேர்க்கை

2026-2027 ஒருங்கிணைந்த இளமறிவியல் மாணவர் சேர்க்கை

கோவை, மே 7- 2026-2027 கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலை பல் கலைக்கழகத்திற்கும் ஒரே இணையதள விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாண வர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவ லர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதா வது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் வேளாண்மைப் பிரிவில் உள்ள இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு 2026-2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளர முறையில் நடைபெற உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பங்கள் 06.05.2026 முதல் 08.06.2026 வரை http://tnau.ucanapply.com என்ற முகவரியில் பெற்று சமர்ப்பிக்கலாம்.

தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் 14 இளமறிவியல் பாடப்பிரிவு களுக்கும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் 3 இளமறிவியல் பாடப்பிரிவுக ளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது.

இளமறிவியல் சேர்க்கைக்கு விண்ணப் பக் கட்டணமாக பொதுப்பிரிவு, பி.சி, பி.சி.எம் மற்றும் எம்.பி.சி மாணவர்களுக்கு 600 ரூபாயும், எஸ்.சி, எஸ்.சி.ஏ மற்றும் எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு 300 ரூபாயும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப் புக் கல்லூரிகளில் 2,516 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 4,736 இடங்களும் உள்ளன.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மொத்தம் 340 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. மேலும் அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 418 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 128 இடங்களும், விளையாட்டு வீரர் மற்றும் முன் னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு தலா 20 இடங்களும் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படு கின்றன.

அதேபோல், 2026-2027 ஆம் கல்வியாண் டிற்கான வேளாண்மை, தோட்டக்கலை மற் றும் வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புக ளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் 200 ரூபாயும், எஸ்.சி மற் றும் எஸ்.டி பிரிவினர் 100 ரூபாயும் கட்டண மாகச் செலுத்த வேண்டும்.

மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்க ளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தை 9488635077 என்ற எண்ணிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை 9865703537 என்ற எண்ணிலும் வாரநாட்களில் தொடர்பு கொள்ளலாம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.