அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உயர்கல்வி இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை
29 Sept 2026, 9:46 pm

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உயர்கல்வி இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் (TNASTF) மாநிலப்

பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் மாநிலத் தலைவர் ஜே. கண்ணன் தலைமையில் நடைபெற்றது.சோமசுந்தரம் வரவேற்புரையாற்ற, கௌரவத் தலைவர் புலவர் மா. கணபதி தொடக்கவுரையாற்றினார். பொதுச்செயலாளர் அ. அமலராஜன் வேலை அறிக்கையையும், பொருளாளர் ஒய். தயாளன் வரவு–செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். துணைப் பொதுச்செயலாளர் சிவ ஸ்ரீ ரமேஷ், செயலாளர்கள் சாந்தசீலன், எஸ். ராஜா ஜெயசிங், வ. செல்வம், ஆர்.ஆனந்தன், துணைத் தலைவர்கள் என். பழனி, சிஸ்டர் சகாயமேரி, எஸ். சவரிமுத்து, பி. ஐசக் சாம்ராஜ், இணைச் செயலாளர்கள் டி. துரைசாமி பாண்டியன், குழந்தை ஆரோக்கிய மேரி, அப்துல் ரஜாக், மாவட்டத் தலைவர்கள் ரேமண்ட், பிரேம், மோகன், முன்னாள் தலைமையிடச் செயலாளர் பழனிவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செயல் தலைவர் த. கனகராஜ் நிறைவுரையாற்ற, மாவட்டச் செயலாளர் புஷ்பராஜ் நன்றி கூறினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தைச்செயல்படுத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதுபோல் 7.5 சதவீத உயர்கல்வி இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பழைய ஓய்வூதியத் திட்டம், கோரிக்கைகள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இஎம்ஐஎஸ் (EMIS) பதிவுகள் மூலம் உபரி ஆசிரியர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்; நிலுவைக் கோப்புகளை முடிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. மருத்துவக்காப்பீட்டில் அனைத்துச் சிகிச்சைகளும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரைச் சந்திப்பதுடன், தேவைப்பட்டால் மாநிலம் தழுவியபோராட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.