மகளிர் கட்டணமில்லா பயணம் விரிவாக்கம் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் இன்று துவக்கம்!
1 Oct 2026, 11:01 pm

மகளிர் கட்டணமில்லா பயணம் விரிவாக்கம் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் இன்று துவக்கம்!

சென்னை, அக். 1 -முதலமைச்சர் விஜய் தலைமையி லான தமிழக அரசு பொறுப்பேற்று 4 மாதங்கள் கடந்து ள்ள நிலையில், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை அவர், வெள்ளிக்கிழமை (அக். 2) அன்று சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைக்கிறார். சாதாரண அரசு நகரப்பேருந்துகளில் தமிழகம் முழுவதும்பெண்கள் ஏற்கெனவே கட்டணமில்லா மல் பயணம் செய்து வருகின்றனர். இந்த

வசதி தற்போது மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்படி, மாநகர், நகர்ப்பகுதிகளில் இயங்கும் சாதாரணப் பேருந்துகள் மட்டுமன்றி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் கட்டண

மில்லாமல் பயணிக்கலாம். அத்துடன், தொலைதூரம் (Mofussil) இயக்கப்படும் அரசு சாதாரணப் பேருந்துகளிலும், 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதிச் சாதாரணப் பேருந்துகளிலும் கட்டணமின்றி பெண்கள் பயணிக்கலாம். மொத்தம் 12,602 பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ்வருகின்றன. இதனால் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.