போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
28 Oct 2026, 12:38 am

போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.27-தனியார் மூலம் மின்சார பேருந்துகளை இயக்கும் முடிவை கைவிட்டு, கழகங்களே இயக்கிட அனுமதி அளிக்கவேண்டும் எனவலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் தமிழக முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்கவேண்டும். தனியார் மூலம் மின்சார பேருந்துகளை இயக்கும் முடிவை கைவிட்டு, கழகங்களே இயக்க அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுமுழுவதும்செவ்வாயன்றுசிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக கோவை சுங்கம் கிளை முன்புநடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.வேளாங்கண்ணிராஜ் துவக்க உரையாற்றினார். அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்டநிர்வாகிகள் ஜெரோம் ரோட்டரிக்ஸ், அருணகிரிநாதன் மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.பரமசிவம் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர்சம்மேளனமாநில துணை பொதுச் செயலாளர் பி.செல்லத்துரை சிறப்புரையாற்றினார். நிறைவாக, சுங்கம் கிளை 2 செயலாளர் மயில்சாமி நன்றி கூறினார்.

தருமபுரி

தருமபுரி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மண்டல துணைத்தலைவர் ஜே.முருகன் தலைமைவகித்தார்.மண்டலச் பொதுச்செயலாளர் சி.ரகுபதி, பொருளாளர் மயில்சாமி, துணைத்தலைவர் கோவிந்தன், துணைச் செயலாளர்

கள் கே.பெருமாள், வெங்கடாஜலபதி, விரைவு போக்குவரத்துக்கழகநிர்வாகி குமார், சேலம் மண்டல பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.