தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பிடுக

16 Jul 2026, 10:01 pm
போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பிடுக

போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பிடுக

சிஐடியு போக்குவரத்து, ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 16- ஓய்வு பெற்ற மற்றும் குடும்ப ஓய்வூ தியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், சிஐடியு ஓய்வு பெற்ற போக்கு வரத்து மற்றும் விரைவு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் மாநிலம் முழு வதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு போக்குவரத்து துறை யில் பணியாற்றிய ஓய்வு பெற்ற மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண் டும். போக்குவரத்தில் தனியார் மயக் கொள்கையை கைவிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கம், சிஐடியு ஓய்வு பெற்ற போக்குவரத்து மற்றும் விரைவு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தி னர் மாநிலம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக சேலம் புதிய பேருந்து நிலையம், மெய்யனூர் போக்குவரத்து பணிமனை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் தலைவர் தங்க வேலு தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.கே.தியாகராஜன், ஆர்.வெங்கடபதி ஆகியோர் பேசினர். இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல பொதுச் செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் செம் பன், பொருளாளர் சேகர், ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் அமைப்பின் தலைவர் பி. ஜெகநாதன் தலைமை வகித்தார். பொது செயலாளர் ஸ்ரீதர், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொது செயலாளர் டி. ஜான்சன் கென்னடி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் என்.முருகையா நிறைவுரையாற்றினார். திர ளான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற னர். கோவை கோவை சுங்கம் பணிமனை முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத் திற்கு கோவை மாவட்ட அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கம் சிஐடியு மாவட்டத் தலைவர் லட்சுமி நாரா யணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம் மேளன பொதுச் செயலாளர் எம்.கனக ராஜ், மண்டலச் செயலாளர் எம்.வேளாங்கண்ணி ராஜ், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டலச் செயலாளர் எம். அருணகிரிநாதன், மண்டலத் தலைவர் ஜெரோம் ரோட்ரிக்ஸ், மண்டலப் பொரு ளாளர் விஜயகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருப்பூர் திருப்பூர் மண்டல அரசு போக்கு வரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ரேவா கிளைத்தலைவர் டி.துரைசாமி தலைமை ஏற்றார். சிஐடியு மண்டல தலைவர் பி.செல்லத்துரை துவக்கி வைத்து பேசினார். மண்டல பொதுச் செயலாளர் கே.கொங்குராஜ், தாராபு ரம் செங்குட்டுவன், உடுமலை விஸ்வநா தன், பல்லடம் பழனிச்சாமி, காங்கேயம் அர்ஜுனன், திருப்பூர் சுப்ரமணி ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் பெருந்திரளான போக்குவ ரத்து ஊழியர்கள் கலந்து கொண்ட னர். நிறைவாக சுப்பிரமணி நன்றி கூறி னார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.