அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
16 Jul 2026, 9:55 pm
<p><strong>அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்</strong></p><p>கும்பகோணம், ஜூலை 16- கும்பகோணத்தில் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு, சிஐடியு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சார்பில், ஓய்வு பெற்றோர் அமைப்பின் துணை பொதுச் செயலாளர் கந்தசாமி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து ஓய்வு பெற்ற மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 2015 நவம்பர் முதல் வழங்க வேண்டிய டிஏ அரியர்ஸ் ரூ. 3637 கோடியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர் தாமோதரன், பொருளாளர் வெங்கடாஜலபதி, அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க கும்பகோணம் மண்டல பொதுச் செயலாளர் மணிமாறன், தலைவர் கார்ல் மார்க்ஸ், சிஐடியு போக்குவரத்து ஸ்தாபக தலைவர் ஆர். மனோகரன், மாவட்டச் செயலாளர் ம.கண்ணன் மற்றும் நிர்வாகிகள், அரசு விரைவு போக்குவரத்து ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், அரசு துறை ஓய்வூதியர் சங்கத்தினர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.</p>
