தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடன் சுமையைக் குறைக்க வணிகர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றக் கூடாது வணிகர் சங்கப் பேரவை அரசுக்குக் கோரிக்கை

17 Jun 2026, 11:27 pm
கடன் சுமையைக் குறைக்க வணிகர்கள் மீது  கூடுதல் சுமையை ஏற்றக் கூடாது  வணிகர் சங்கப் பேரவை அரசுக்குக் கோரிக்கை
<p><strong>கடன் சுமையைக் குறைக்க வணிகர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றக் கூடாது வணிகர் சங்கப் பேரவை அரசுக்குக் கோரிக்கை</strong></p><p>சென்னை, ஜூன் 17- தமிழக அரசின் நிதி நிலை மற்றும் கடன் சுமை குறித்த வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலை யில், மாநிலத்தின் கடன் சுமையைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக் கைகள் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்களைப் பாதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமை ப்பின் தலைவர் எஸ்.சவுந் தரராசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விரிவான விவரம் பின்வருமாறு: சொத்து வரி மற்றும் உரிமக் கட்டண உயர்வு கூடாது. ஏற்கெனவே நகராட் சிகளிலும், மாநகராட்சிகளி லும் உயர்த்தப்பட்ட சொத்து வரிகளால் வணிகர்கள் கடு மையாகப் பாதிக்கப்பட் டுள்ளனர். எனவே, உள்ளா ட்சி அமைப்புகளின் வரு வாயைப் பெருக்குகிறோம் என்ற பெயரில் வணிகக் கடைகளுக்கான சொத்து வரியையோ, வணிக உரிமக் கட்டணங்களையோ மீண்டும் உயர்த்தக் கூடாது. உயர்த்தப்பட்ட வரிகளை எளிமையான முறையில் முறைப்படுத்த வேண்டும். மின் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும். மின் வாரியத்தின் கடன் மற்றும் நஷ்டத்தைக் காரணம் காட்டி வணிகப் பயன்பாட்டிற்கான மின் கட்டணங்களை உயர்த்தக் கூடாது. ஆன் லைன் வர்த்தகப் போட்டி, பணவீக்கம் ஆகியவற் றால் ஏற்கனவே நலிவடைந் துள்ள சிறு வணிகர்களுக் குக் கூடுதல் மின் கட்டண உயர்வு பெரும் சுமையாக மாறும். வரி முறைகளை எளி தாக்க வேண்டும் மாநிலத் தின் சொந்த வரி வரு வாயைப் பெருக்குவதற்கு வணிகர்களை அச்சுறுத்தும் நடைமுறைகளைக் கையா ளாமல், வரி செலுத்தும் முறைகளை எளிதாக்க வேண்டும். நேர்மையாக வரி செலுத்துவோருக்குப் பாராட்டும், ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும். சிறப்புச் சலுகைகள் மற்றும் ஆலோசனைக் கூட்டம். தமிழகப் பொருளா தாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் வணிகர்கள் நலி வடையாமல் பாதுகாக்க, ‘வணிகர் நல வாரியம்’ மூலம் சிறப்புச் சலுகை களும், எளிய முறையில் கடனுதவிகளும் வழங்கப் பட வேண்டும். இந்த நிதி நெருக்கடிச் சூழலில், லட்சக்கணக்கான வணிகர்களின் வாழ்வா தாரத்தைக் கருத்தில் கொண்டு அரசு முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக முதலமைச் சரும், நிதி அமைச்சரும் வணி கர் சங்கப் பிரதிநிதிகளை நேரில் அழைத்து ஆலோ சிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலி யுறுத்தப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.