தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுதேசி வணிகத்தைக் காக்க நடவடிக்கை தேவை முதல்வருக்கு வணிகர் சங்கப் பேரவை கோரிக்கை

12 May 2026, 1:50 am
சுதேசி வணிகத்தைக் காக்க நடவடிக்கை தேவை முதல்வருக்கு வணிகர் சங்கப் பேரவை கோரிக்கை

சுதேசி வணிகத்தைக் காக்க நடவடிக்கை தேவை முதல்வருக்கு வணிகர் சங்கப் பேரவை கோரிக்கை

சென்னை, மே 11- தமிழக முதல்வராகப் பெறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, சுதேசி வணிகத்தைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேரவை தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகியுள்ள அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் வர்த்தக மோகத்தால் சிறு வணிகம் அழிந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனைத் தடுக்க விழிப்புணர்வு குறும்படங்களை அரசு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், போதை கலாச்சாரத்தை ஒழித்தல் மற்றும் சிறு குறு வணிகர்களுக்கு வங்கிகளில் பிணைய மில்லாக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார். புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலை யில்லா திண்டாட்டத்தைப் போக்க இந்த அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் சிலிண்டர் மானியம் ரத்தாகும் அபாயம்

சென்னை, மே 11- ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள சமையல் எரிவாயு நுகர்வோருக்கான மானியத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அரசு அனுப்பும் குறுஞ்செய்தி: மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் உத்தரவின்படி, வருமான வரி கணக்குகளின் அடிப்படையில் குறிப்பிட்ட வருமான வரம்பைத் தாண்டிய நுகர்வோருக்குத் தற்போது குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதில், “உங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் 7 நாட்களுக்குள் 1800-2333-555 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இல்லையெனில் மானியம் நிறுத்தப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிருப்தி தற்போது சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.24.50 மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது. இந்தச் சிறிய தொகைக்காகத் தனிநபரின் வருமான வரி விவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்வது ‘தனியுரிமை மீறல்’என நுகர்வோர் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். “ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்குக்கூடப் பத்தாத இந்த மானியத் தொகையை ரத்து செய்ய இவ்வளவு மெனக்கெடுவது தேவையற்றது” எனப் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். குழப்பத்தில் விநியோகஸ்தர்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கேஒய்சி சரிபார்ப்பிற்குப் பிறகு இத்தகைய செய்தி கள் அனுப்பப்படுவதால் வாடிக்கையா ளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள் ளதாக எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரி விக்கின்றனர். ஊரடங்கு காலத்திற்குப் பிறகு குறைக்கப்பட்ட இந்த மானியத் தொகை மீண்டும் உயர்த்தப்படாத நிலை யில், இந்த புதிய நடவடிக்கை நுகர்வோரை எரிச்சலடையச் செய்துள்ளது.

தெருநாய்களுக்கான தனிமைப்படுத்தல் மையம் சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, மே 11- சென்னையில் வெறிநாய்க்கடி மற்றும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆக்ரோஷமான தெருநாய்களைப் பராமரிப்பதற்காக, பெருங்குடி மண்டலம் ம.பொ.சி. நகரில் புதிய தனிமைப்படுத்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், நோயுற்ற 100 நாய்களைப் பராமரிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ரேபிஸ் மற்றும் 'கெனைன் டிஸ்டெம்பர்' போன்ற வைரஸ் பாதிப்புள்ள நாய்களை மீட்க 6 சிறப்பு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, மணலி மற்றும் பெருங்குடியில் தலா 250 நாய்கள் தங்கும் வசதியுடன் கூடிய பிரம்மாண்ட காப்பகங்கள் (Dog Shelters) கட்டப்பட்டு வருகின்றன. இனக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தற்போது சென்னையில் 10 இடங்க ளில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன; மேலும் 4 மையங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன. இதுவரை 88,240 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சையும், சுமார் 1.47 லட்சம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. நாய் பிடிக்கும் பணிக்காக 28 வாகனங்களும், 159 பணி யாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக 15 புதிய வாகனங்கள் விரை வில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. தெருநாய்கள் தொடர்பான புகார்கள் அல்லது ஆக்ரோஷமான நாய்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்க பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நட வடிக்கைகள் மூலம் நோய் பரவல் தடுக்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மின்சாரம் தாக்கி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலி

சென்னை, மே 11- சென்னை நுங்கம் பாக்கத்தில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்த 66 வயது ஆம்புலன்ஸ் ஓட்டு நர் மின்சாரம் தாக்கி பரிதாப மாக உயிரிழந்தார். கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த எம். கிருஷ்ணன் என்பவர், ஞாயிறன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள பொதுக்கல்வி இயக்கக வளாகம் அருகே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்க இறங்கி யுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு தரையில் கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் நுங்கம்பாக்கம் போலீசா ருக்குத் தகவல் தெரிவித்த னர். போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோத னைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் பயில இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 11 - தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பயில விரும்புவோர் இன்று முதல் (மே 12) இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சென்னை தரமணியில் இயங்கும் இந்த கல்லூரியில் இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு), இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை), இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு), இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்), இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு), இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) பாடப்பிரிவுகள் உள்ளன. கலை ஆர்வம் உள்ள மாணவர்கள் முதற்கட்டமாக மே 12 காலை 10 மணி முதல் www.filminstitute.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்து, கட்டணத்தினை செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இரண்டாம் கட்டமாக அனைத்து உரிய ஆவணங்களையும் ஜூன் 2ந் தேதி மாலை 5 மணிக்குள்

ரூ.65 லட்சம் பணத்தை திருடிய நகைக்கடை ஊழியர் கைது

சென்னை, மே 11- யானைகவுனி பகுதியில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.65 லட்சம் பணத்தை ஏமாற்றித் தலைமறைவான ஊழியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திருநங்கையை போலீசார் கைது செய்தனர். என்.எஸ்.சி போஸ் சாலையில் நகைக்கடை நடத்தி வரும் நிகால்சந்த் ஜெயின் என்பவரிடம் வேலை பார்த்த நவீன், கடந்த மே 6-ஆம் தேதி வெள்ளிக் கட்டிகளை விற்று வரப்பெற்ற ரூ.65 லட்சத்துடன் மாயமானார். புகாரின் பேரில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், நவீன் ஊட்டியில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் தனது தோழியான பிரார்த்தனா என்ற திருநங்கையுடன் சேர்ந்து இத்திட்டத்தைத் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் இருந்த பிரார்த்தனாவையும் கைது செய்த போலீசார், இருவரிடமிருந்தும் மொத்தம் ரூ.58.44 லட்சத்தை மீட்டனர். இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாணவர்களுக்கான தொழில்நுட்பப் போட்டி ரூ. 40 லட்சம் பரிசு அறிவிப்பு

சென்னை, மே 11- விவோ இந்தியா நிறுவனம் தனது கல்விச் சேவையின் ஒரு பகுதியாக, ‘விவோ இக்னைட்: தொழில்நுட்பம் மற்றும் புதுமை முயற்சி’ என்ற திட்டத்தின் நான்காவது பதிப்பைத் தொடங்கியுள்ளது. இந்தத் தேசிய அளவிலான போட்டியில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இளம் மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் கண்டுபிடிப்புத் திறனை வெளிக்கொண்டு வருவதும், தொழில்நுட்ப ரீதியாக அவர்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதுமே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் சமூகம், மென்பொருள், விவசாயம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற துறைகளில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் தங்களின் மாதிரி வடிவங்களைச் சமர்ப்பிக்கலாம். மாணவர்கள் தனி நபராகவோ அல்லது மூன்று பேர் கொண்ட குழுவாகவோ இதில் இணையலாம். இந்தப் போட்டி மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும். இதன் இறுதிப் போட்டி வரும் அக்டோபர் 11ஆம் தேதி புதுதில்லியில் நடத்தப்பட உள்ளது. இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகும் சிறந்த 10 மாணவர்கள் தங்களின் படைப்புகளை அங்கு விளக்குவார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தமாக ரூ.40 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என விவோ இந்தியா தெரிவித்துள்ளது.

மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு வாகனக் காப்பகம் அமைக்கக் கோரிக்கை

மேல்மருவத்தூர், மே 11- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் வாகனக் காப்பகம் இல்லாததால், பயணிகளின் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகின்றன. எனவே, அங்கு உடனடியாக வாகனக் காப்பகம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேல்மருவத்தூர் மற்றும் அச்சிறுப் பாக்கம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சென்னைக்கு ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். ரயில் நிலையத்தில் முன்பு இருந்த வாகனக் காப்பகம் சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டதால், பயணிகள் தங்கள் வாகனங்களைச் சாலையோரங்களிலும் ரயில்வே வளா கத்திலும் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்திச் செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகனங்கள் திருடுபோவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சாமானிய மக்களின் வாகனப் பாது காப்பைக் கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் உடனடியாக வாகனக் காப்ப கத்தை அமைக்க வேண்டும் என வாலிபர் சங்கம், சிபிஎம் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னையில் ரூ.40 கோடியில் இரண்டு போக்குவரத்து மையங்கள் மாநகராட்சி திட்டம்

சென்னை, மே 11- சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில், வண்ணாரப்பேட்டை மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் இரண்டு ‘மல்டி-மாடல்’ போக்குவரத்து மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை-மின்ட் சாலை இந்த மையம் மெட்ரோ ரயில், மின்சார ரயில் மற்றும் பேருந்து சேவைகளை ஒன்றி ணைக்கும். இதன் மூலம் பிராட்வே, ராயபுரம் செல்லும் பயணிகளின் நெரிசல் குறையும். சேப்பாக்கம் - மெரினா அரசு அலுவலகங்கள், கல்வி நிறு வனங்கள் மற்றும் கடற்கரைக்கு வரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, இங்கு பாதசாரிகளுக்கான நடைபாதைகள் மற்றும் சைக்கிள் நிறுத்தங்கள் மேம்படுத்தப்படும். தற்போது மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்களுக்கு இடையே தடையற்ற இணைப்பு இல்லாததாலும், குறுகிய நடை பாதைகளாலும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைச் சரிசெய்யும் வகையில், பாதுகாப்பான நடைபாதைகள், வாகனங்கள் வந்து செல்ல தனி இடங்கள் மற்றும் கடைசி மைல் இணைப்பு வசதிகள் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும். மெட்ரோ ரயில் நெட்வொர்க் விரி வடைந்து வரும் சூழலில், இத்தகைய ஒருங்கி ணைந்த மையங்கள் மக்கள் பொதுப் போக்கு வரத்திற்கு மாறுவதை ஊக்குவிக்கும் என நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரே ரோபோடிக் அறுவை சிகிச்சை: இரண்டு புற்றுநோய்கள் அகற்றம்

​​​​​​சென்னை, மே 11- மருத்துவத் துறை அதிநவீன தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு புற்றுநோய்களை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் தைராய்டு புற்றுநோய் ஆகிய இரண்டும் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப் பட்டன. பொதுவாக, இத்தகைய நோய்களுக்கு தனித்தனியாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். ஆனால், நோயாளியின் உடல்நலம் மற்றும் விரைவான மீட்சியைக் கருத்தில் கொண்டு, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மேம்பட்ட ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவெடுத்தனர். 4வது தலைமுறை ரோபோடிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன், மிகச்சிறிய துளைகள் வழியாக இந்த அறுவை சிகிச்சை மிகத் துல்லியமாக நடத்தப்பட்டது. அக்குளின் கீழ் மற்றும் மறைவான பகுதிகளில் சிறிய துளைகள் இடப்பட்டதால், கழுத்து அல்லது மார்பகத்தின் முன்பகுதியில் அறுவை சிகிச்சைக்கான பெரிய தழும்புகள் ஏதுமின்றி புற்றுநோய் திசுக்கள் முழுமையாக அகற்றப்பட்டன. இந்த நவீன முறையினால் திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்பட்டு, நோயாளி மிகக் குறைந்த வலியுடன் விரைவாகக் குணமடைந்து தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதும், நவீன மருத்துவ முறைகளைக் கையாள்வதும் உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து மக்களைக் காக்க உதவும் என்பதற்கு இந்தச் சாதனை ஒரு சிறந்த உதாரணமாகும் என்று புற்றுநோயியல் துறை முதுநிலை நிபுணர் டாக்டர் சுஜய் சுசிகர் கூறினார்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.