தீக்கதிர் விரைவு செய்திகள்
24 May 2026, 9:39 pm

சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு

சென்னை, மே 24 - தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சென்னை - கன்னி யாகுமரி, திருச்சி - சேலம், சேலம் - கோவை உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் 60 சுங்கச்சாவடி கள் அமைந்துள்ளன. சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்.1-ம் தேதி முதல் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளை சுற்றியுள்ள உள்ளூர் சிறிய ரக வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை சுற்றி அதிக சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச்சாவடிகள் அமைந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சலுகை அடிப்படையில் மாதாந்திர பாஸ் வழங்கப்படுகின்றன. 20 கி.மீ. சுற்றளவுக்கு உட்பட்டு வசிக்கும் மக்களுக்கு சிறிய ரக வாகனங் களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.340-இல் இருந்து ரூ.350 ஆக உயர்ந்துள்ளது. ஒரு சில சுங்கச்சாவடிகளில் ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய மருத்துவமனைகள் திறக்க அனுமதி இல்லை

தமிழக சுகாதாரத் துறை தகவல் சென்னை, மே 24 - தமிழ்நாட்டில் புதிதாக 8000 கிளினிக் மற்றும் மருத்து வமனைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறை யில் பரிசீலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள் ளது. விண்ணப்பங்களில் தகுதியுள்ள மருத்துவமனை களுக்கு மட்டும் தற்காலிக சான்றிதழ் வழங்க அறி வுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக 8000 கிளினிக், மருத்துவமனை திறக்க அனுமதி வழங்கப்பட்டதாக செய்தி பரவும் நிலையில் தமிழக சுகாதாரத் துறை இதைத் தெரிவித்துள்ளது.

போலா அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா, காங்கோ, தெற்கு சூடான் ஆகிய வற்றில் ‘Bundibugyo’ வகை எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வரு வதால் உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. இதுவரை 204 பேர் உயிரிழ ந்துள்ள நிலையில் 867 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த சூழலில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை, சென்னை, திருச்சி, கோயம்புத் தூர், மதுரை சர்வதேச விமான நிலையங்களில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்யவும் தனிமைப்படுத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.