கூடுதல் காட்சி நேரத்திற்கு அனுமதி: திரையரங்க உரிமையாளர்கள் வரவேற்பு
6 Nov 2026, 12:50 am

கூடுதல் காட்சி நேரத்திற்கு அனுமதி: திரையரங்க உரிமையாளர்கள் வரவேற்பு

திருப்பூர், நவ.5-தமிழ்நாட்டில் திரையரங்குகளில் காலை 6 மணி முதல் 6 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதிவழங்கியுள்ளது. இதனால் சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும், தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாகவும் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிர

மணியம் தெரிவித்துள்ளார்.திருப்பூரில் செவ்வாயன்று அவர்பேட்டியளித்தபோது கூறியதாவது: தமிழ் திரையுலகம் சார்பாக தமிழகமுதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததுடன், திரையரங்குகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினோம் 1952ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திரையரங்குகள் தொடர்பான விதிமுறைகளில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் செய்ய வேண்டும்,என கோரிக்கை விடுத்தோம், அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ஐந்து காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டநிலையில், தற்போது ஆறு காட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காலை 6 மணிக்கே முதல் காட்சிதிரையிடப்படும் நிலையில், தமிழகத்திலும் அதேபோல் அனுமதி வழங்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர் இந்த அனுமதி மூலம் பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கு மட்டுமின்றி, சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கும் கூடுதல் காட்சிகள் ஒதுக்கவாய்ப்பு கிடைக்கும், இதனால் சிறிய திரைப்பட தயாரிப்பாளர்கள் பயனடைவார்கள்மேலும், தமிழகத்தில் உள்ள சுமார் 1,800 திரையரங்குகளிலும் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுவதன் மூலம் அரசுக்கும் வரி வருவாய் அதிகரிக்கும் அதே நேரத்தில், அதிகாலை காட்சிகளின்போது பாதுகாப்புஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன்படி அனைத்து திரையரங்கு உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை மற்றும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரே நேரத்தில் அனைத்து திரைகளிலும் காட்சிகளை தொடங்காமல், 10 முதல் 15நிமிட இடைவெளியில் வெவ்வேறுதிரைகளில் காட்சிகளை தொடங்கினால் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். தீபாவளி பரிசாக திரையரங்குகளுக்கும் ரசிகர்களுக்கும் இந்த ஆறு காட்சிகள் அனுமதி கிடைத்துள்ளதாகவும், இதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய், சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் தமிழகஅரசுக்கு திரையுலகம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜெயிலர் -2 மூன்று வாரங்களை கடந்துள்ளது தீபாவளிக்கு இன்னும்திரையில் இருக்கும் ஜெயிலர் - 250 நாட்கள் கடந்து படம் ஓடும். திரைப்படங்களின் உண்மையான வசூல் விவரங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கே முழுமையாக தெரியும், இனிவரும் காலங்களில் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வசூல் விவரங்களை மட்டுமே நம்ப வேண்டும்.

2026ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை பொறுத்தவரை தொடக்கத்தில் சில மாதங்கள் சிரமமாக இருந்தாலும், அதன் பின்னர் சிறிய திரைப்படங்கள் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சம் கொண்ட சிறிய திரைப்படங்களையும் ரசிகர்கள் வரவேற்க தொடங்கியுள்ளனர். இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானமாற்றம் மேலும், 2027ஆம் ஆண்டில் ஆறு காட்சிகள் அனுமதி மூலம் சிறியதிரைப்படங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும், புதிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு இதுஉதவியாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.