பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு தொழில், கல்விக்கடன்கள் வழங்கல் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தகவல்
18 Jun 2026, 11:14 pm

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு தொழில், கல்விக்கடன்கள் வழங்கல் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தகவல்

நாகர்கோவில்,ஜூன் 18- பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.

மேலும் இக்கழகம் பி.வ. மி.பி.வ(ம) சீ.ம. மாணவியர்களுக்கு வெளிநாட்டுக் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கப்படுகிறது .

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இணையதள முகவரியில் (http://tabcedco.net) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். கல்வி கடனுக்கு மாநில அரசின் வருமானச் சான்றிதழ் வழங்கும் தகுதி வாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

(அல்லது) ஆ வர்த்தமானி பதிவு பெற்ற அதிகாரியால்(Gazetted Officer) சான்றளிக்கப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட ஆண்டு குடும்ப வருமானச் சான்றிதழ். ஒரு மாணவருக்கு அதிகபட்சக் கடன் வரம்பு ரூ.25,00.000-க்கு உட்பட்ட பாடத்திட்டத்தின் செலவில் 85 சதவீதம், புதுதில்லியின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மூலமும் மீதமுள்ள 15 சதவீதம் தமிழ்நாடு அரசால் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கிய பிறகு, எப்போது வேண்டுமானாலும் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். இதற்கான முன் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. விண்ணப்பப் படிவம் இக்கழக இணையதள முகவரியில் (https://tabcedco.net) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே குமரி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டார், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் குழுக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கேட்டுக்கொண்டுள்ளார்.