முந்தய பக்கம்

மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை விடுவிப்பு

14 May 2026, 10:32 pm
மாணவர்களுக்கு ரூ.1,000  உதவித்தொகை விடுவிப்பு
<p><strong>மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை விடுவிப்பு</strong> </p><p>சென்னை, மே 14 - திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆட்சி மாறிய நிலையில், இந்த மாதத்திற்கான ரூ.1,000 உதவித்தொகை கிடைக்குமா என்ற சந்தேகங்கள் இருந்து வந்தன. உதவித்தொகையானது, ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதியே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற நிலையில், 10-ஆம் தேதியைக் கடந்தும் அது வரவு வைக்கப்படாதது ஐயப்பாட்டை அதிகரித்தது. இதுபற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், ரூ. 1000 மாத உதவித்தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் த.வெ.க. அரசு வரவு வைத்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram