தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் எதிர்ப்பு மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவதா? தமிழக அரசுக்கு மாணவர் கூட்டமைப்பு கண்டனம்

18 May 2026, 10:36 pm
நீட் எதிர்ப்பு மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவதா? தமிழக அரசுக்கு மாணவர் கூட்டமைப்பு கண்டனம்
<p><strong>நீட் எதிர்ப்பு மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவதா? தமிழக அரசுக்கு மாணவர் கூட்டமைப்பு கண்டனம்</strong></p><p>சென்னை, மே 18 - நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (தமிழ்நாடு), இந்தக் காவல்துறை நடவடிக்கை தமிழ்நாடு அரசுக்கு உடன்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வீரமணி ஜெயக்குமார், தௌ. சம்சீர் அகமது உள்ளிட்டோரும், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட உறுப்பு அமைப்புகளும் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன. அகில இந்திய அளவில், கடந்த மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் கேள்வித் தாள்கள் கசிந்தது உண்மை என கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்வு மோசடியில் பாஜக மற்றும் தேசியத் தேர்வு முகமையின் பங்கு அம்பலப்பட்டு உள்ளது. இந்த மோசடியால் நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சென்னை சாஸ்திரி பவன் எதிரில் இம்மோசடிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கைது செய்து, அவர்கள் மீது வழக்குத் தொடுத்து, சட்டையைக் கிழித்துக் காவல்துறை நடந்துகொண்ட போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வையும், தேசியக் கல்விக் கொள்கையையும் ஒழிக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும், அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.