பதவி உயர்வு, பணியிட மாறுதல் கோரி ஆக. 18-ல் பெருந்திரள் முறையீடு
21 Jul 2026, 12:06 am
<p><strong>பதவி உயர்வு, பணியிட மாறுதல் கோரி ஆக. 18-ல் பெருந்திரள் முறையீடு </strong></p><p>கடலூர், ஜூலை 20– தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தின் மாநிலக் கருத்தரங்கு கடலூரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். சமூக நலத்துறை பணியாளர்களுக்குக் காலதாமதமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி சென்னை இயக்குநர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய பெருந்திரள் முறையீட்டுப் போராட்டம் நடத்துவது என இக்கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் ஆதவன் தீட்சண்யா, அரசு ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் சோமசுந்தரம், நிர்வாகிகள் வெற்றிவேல், குமரவேல், துரைசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
