கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! மாணவர்கள் உற்சாகம்; இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு
5 Jun 2026, 12:36 am

கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! மாணவர்கள் உற்சாகம்; இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு

சென்னை, ஜூன் 4 - தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை நிறை வடைந்து, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் வியாழக்கிழமையன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

2026-27 கல்வியாண்டின் முதல் நாள் என்பதால், மாண வர்கள் மிகுந்த உற்சாகத்து டன் பள்ளிகளுக்குச் சென்ற னர்.

அவர்களை, பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் ஆசிரியர்கள் வரவேற்றனர். பாடநூல்கள் விநியோகம் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே, பள்ளி கள் திறக்கும் அன்றே மாண வர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வியாழனன்று பாடப் புத்தகங்கள் வழங்கப் பட்டன.

முதலமைச்சர் வாழ்த்து பள்ளிகள் திறப்பை யொட்டி, தமிழ்நாடு முத லமைச்சர் ச. ஜோசப் விஜய் சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளி யிட்டிருந்தார்.

அதில், “கல்வி தான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்பக் கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன் னேற்றமாக இருக்கட்டும்.

மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்” என்று அதில் தெரிவித்திருந் தார்.