ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை வரவேற்புக்குழு அமைப்பு
19 Jun 2026, 10:44 pm

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை வரவேற்புக்குழு அமைப்பு

சேலம், ஜூன் 19- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பிரதிநிதித் துவ பேரவை சேலத்தில் நடைபெற உள்ள நிலையில் இதற்கான வரவேற் புக்குழு அமைப்பு கூட்டம் பொறியாளர் அரங்கத்தில் வியாழனன்று நடைபெற் றது

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பிரதி நிதித்துவ மாநாடு சேலத்தில் நடை பெற உள்ளது. ஜூலை 25, 26 தேதி களில் இரும்பாலை சாலையில் உள்ள டிஎஸ்கே திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநில பிரதி நிதித்துவ மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கோரிக்கைகளை வென் றெடுக்கும் வகையில் பேரவை திட்ட மிட உள்ளது. இந்த பேரவையை வெற்றி கரமாக்கிட வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் வியாழனன்று அமைப்பின் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் காந்திமதி நாதன், பொதுச்செயலாளர் பிரபு, மாநில துணைத்தலைவர்கள் வளர்மாலா, திரு வேரங்கன், அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் சுரேஷ், தலைவர் அர்த்த

நாரி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதைத்தொடர்ந்து, வரவேற்புக் குழு தலைவராக சுரேஷ், செயலாளராக ஜான் ஆன்ஸ்டின், பொருளாளராக வடி வேல், சிறப்பு தலைவர்களாக வெ. அர்த்தனாரி, சுப்ரமணியம் மற்றும் 10 துணைத்தலைவர்கள், 10 இணைச்செய லாளர்கள், 5 நிதிக்குழுவினர் ஆகியோர் அடங்கிய வரவேற்புக்குழு அமைக்கப் பட்டது.