தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பல்கலை. பேராசிரியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்க கூடாது! தமிழ்நாடு ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல்

30 Jun 2026, 12:14 am
பல்கலை. பேராசிரியர்களின்  ஓய்வு வயதை அதிகரிக்க கூடாது! தமிழ்நாடு ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல்
<p><strong>பல்கலை. பேராசிரியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்க கூடாது! தமிழ்நாடு ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, ஜூன் 29 - பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஓய்வு வயதை 65ஆக உயர்த்தும் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆராய்ச்சி மையம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழ கங்களில் பணியாற்றும் பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 65-ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மாநிலத்தில் 15 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் நீண்டகால மாக காலியாக உள்ளது. 21 அரசு பல்கலைக் கழகங்களில் அனுமதிக்கப்பட்ட 9 ஆயிரத்து 201 ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதம் வரை நிரப்பப்படாமல் உள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட 534 ஆசிரியர் இடங்களில் 180 இடங்களில் மட்டுமே நிரந்தர ஆசிரியர்கள் உள்ளனர். 10 ஆண்டு களுக்கும் மேலாக நேரடி ஆசிரியர் நிய மனங்கள் நடைபெறவில்லை. இதனால் ஆராய்ச்சி, முனைவர் பட்ட ஆய்வுகள், கல்வித் தரம் மற்றும் மாணவர் வழிகாட்டல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்த 2025 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்ட பிறகும் அரசாணை வெளி யிடப்படவில்லை. இந்நிலையில் உதவிப் பேராசிரியர்களின் எண்ணிக்கையை (கவுரவ விரிவுரையாளர்களையும் சேர்த்து) 2 ஆயிரத்து 700 லிருந்து 4 ஆயிரமாக உயர்த்த கடந்த மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முனைவர், பட்டதாரிகள் மற்றும் தகுதியுடைய ஆயிரக்கணக்கானோர் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இவர்களில் பலர் கௌரவ விரிவுரையாளர்”. “தற்காலிக ஆசிரியர்” “ஒப்பந்த ஆசிரியர்” என பணிப்பாதுகாப்பற்ற நிலையில் நீண்ட நாட்களாக பணியாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில் ஆசிரியர்களின் ஓய்வு வயதை உயர்த்தினால், உயர்கல்வித் துறையில் தலைமுறை மாற்றத்தையும் புதிய ஆராய்ச்சி வாய்ப்புகளையும் மேலும் தாமதப்படுத்தும். உயர்கல்வி அமைப்பின் நீண்ட கால முன்னேற்றத்திற்கு தீர்வாக அமையாது. எனவே, பல்கலைக்கழக பேராசிரியர்க ளின் ஓய்வு வயதை 65ஆக உயர்ந்தும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். அரசு பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்வுடன் நிரப்ப வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை 4ஆயிரமாக உயர்த்த உடனடியாக அரசாணையை வெளியிட வேண்டும். நீண்டகாலமாக பணியாற்றும் தற்காலிக மற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் நிலையை ஆய்வு செய்து பணிப்பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை உருவாக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி கற்பித்தல் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் தனித்திட்டத்தை மாநில அரசு அறிவிக்க வேண்டும். உயர்கல்வி வேலைவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சியை இணைக்கும் மாநில அளவிலான மனிதவளத் திட்டமிடலை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.